கனடா தனது சட்டத்தை மீறி சவுதிக்கு ஆயுதம் விற்பனை

கனடா தனது சட்டத்தை மீறி சவுதிக்கு ஆயுதம் விற்பனை

கனடா தனது சட்டத்தையும் மீறி சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளன Amnesty International Canada, Project Ploughshares ஆகிய அமைப்புகள். இன்று புதன் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை கனடா தான் சட்டமாக்கிய Arm Trade Treaty (ATT) என்ற இணக்கத்துக்கு முரணாக ஆயுத விற்பனையில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டி உள்ளது.

2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடா ஐ.நா. வின் ATT விதிகளை தனது Bill C-47 மூலம் சட்டமாக்கியது. B-47 சட்டத்தின் கீழ் உள்ள Export and Import Permits Act (EIPA) அங்கம்,  Yemen நாட்டில் சவுதி செய்யும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, கனடா தனது ஆயுதங்களை சவுதிக்கு விற்பனை செய்வதை தடுத்திக்கவேண்டும். 

ஆனாலும் கனடா LAV 700 போன்ற இராணுவ வாகனங்களை சவுதிக்கு விற்பனை செய்துள்ளது என்று மேற்படி அறிக்கை குற்றம் சுமதி உள்ளது. மேற்படி LAV வாகன கொள்வனவு மூலம் கனடா U$ 12 பில்லியன் வருமானம் பெற்று இருந்தது என்றும் கூறப்படுகிறது. அந்த வாகனங்களில் சில பின்னர் Houthi இன ஆயுத குழுவின் தாக்குதலுக்கு இரையாகி வீதிகளில் செயலிழந்து இருந்தமை படங்கள் மூலம் வெளியாகி இருந்தன.

பத்திரிகையாளர் ஜமால் கசோகியின் (Jamal Khashoggi) படுகொலையின் பின் கனடா சவுதி மீது ஆயுத விற்பனை தடையை நடைமுறை செய்து இருந்தாலும், 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடா ஆயுத விற்பனை தடையை நீக்கி இருந்தது.

2014ம் ஆண்டு Yemen நாட்டில் ஆரம்பித்த யுத்தத்துக்கு இதுவரை சுமார் 233,000 பேர் மரணித்து உள்ளனர் என்கிறது ஐ.நா.