கனடிய-அமெரிக்க எல்லையில் 4 இந்தியர் குளிருக்கு பலி

கனடிய-அமெரிக்க எல்லையில் 4 இந்தியர் குளிருக்கு பலி

கனடிய-அமெரிக்க எல்லையோரம் ஆண், பெண், இளவயதினர், குழந்தை ஆகிய நால்வர் கடும் குளிரில் உறைந்து பலியாகி உள்ளனர் (frozen to death). அகதிகளை கடத்தும் குழு ஒன்றே இதற்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது தொடர்பாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில்  6 பேர் கைதும் செய்யப்பட்டு உள்ளனர்.

மரணித்தவர்கள் கடவுச்சீட்டு விபரங்களின் அடிப்படையில் இந்த நால்வரும் குஜராத் மாநிலத்தின் குடும்பம் ஒன்று என்று குஜராத் போலீசார் கூறியுள்ளனர். இவர்கள் கனடா சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல முயன்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மரணித்தோர் Manitoba மாநிலத்தின் எல்லை பகுதியில் உள்ள Emerson நகரில் கடும் பனிப்புயலில் சிக்கி, தம்முடன் சென்ற 18 பேர் கொண்ட குழுவில் இருந்து தவறுதலாக பிரிந்து உள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சிலர் அமெரிக்காவுள் நுழைந்து இருந்தாலும், பின்னர் அவர்கள் அமெரிக்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.