கனடிய குடியுரிமைக்கு போராடும் சட்டவிரோத வங்கிக்காரி

கனடிய குடியுரிமைக்கு போராடும் சட்டவிரோத வங்கிக்காரி

Caixuan Qin என்ற பெண்ணும், Jian Jun Zhu என்ற அவரின் கணவனும் சட்டவிரோத பணத்தை சட்டவிரோத வங்கி ஒன்று மூலம் தூய பணமாக்கும் செயலில் ஈடுபட்டு வந்திருந்தனர். ஆனால் கணவர் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் கணவர் வான்கூவர் உணவகம் ஒன்றில் சுட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். தற்போது கனடிய குடியுரிமை பெற முனையும் மனைவி Qin கனடிய அரசை நீதிமன்றம் இழுக்கிறார்.

2015ம் ஆண்டு Silver International Investments என்ற சட்டவிரோத வங்கி ஒன்றை (underground bank) கனடாவின் Richmond நகரில் ஆரம்பித்த தம்பதிகள் சட்டவிரோத பணத்தை casino ஒன்றில் சூதாடி, வெற்றி பணத்தை பெறுவதன் மூலம் சட்டவிரோத பணத்தை தூய பணமாக்கினர். இவர்களுக்கு பெருமளவு கூலி கிடைத்துள்ளது.

இந்த சட்டவிரோத வங்கி தொடர்பாக இரகசிய தகவலை பெற்ற போலீசார் தம்பதியின் வங்கியை முற்றுகை இட்டு சுமார் C$2 மில்லியன் பெறுமதியான பணம், casino chips, gift cards போன்ற சொத்துக்களை கைப்பற்றி இருந்தனர். தம்பதிகளுக்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டது.

ஆனாலும் தம்பதிகளுக்கு எதிராக கனடிய அரசு தொடுத்த வழக்கு இடையில் கைவிடப்பட்டது. அரசுக்கு தம்பதிகள் தொடர்பான இரகசிய தகவலை வழங்கியவரின் விபரத்தை தவறுதலாக அரசு தம்பதிகளின் சட்டத்தரணிக்கு வழங்கியதே காரணம்.

அதேவேளை CRA என்ற கனடிய வருமான திணைக்களம் Qin 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரை மொத்தம் C$25,000 வருமானத்தையே வருமான வரிக்கு காட்டி இருந்ததாகவும், ஆனால் Qin ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கூறியுள்ளது. Qin சுமார் C$2.3 மில்லியன் வருமானத்தை ஒளித்து உள்ளதாக வருமானவரி திணைக்களம் குற்றம் சாட்டுகிறது.

2019ம் ஆண்டு Qin கனடிய குடியுரிமைக்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனாலும் 29 மாதங்கள் கடந்த நிலையில் இவரின் விண்ணப்பம் விசாரணை செய்யப்படவில்லை. பொதுவாக ஒரு விண்ணப்பம் 12 மாதங்களில் விசாரணை செய்யப்பட்டு இருக்கும். தனது உரிமையை கனடிய குடிவரவு திணைக்களம் மறுத்து உள்ளது என்பதே Qin னின் குற்றச்சாட்டு. ஆனால் கரோனா காரணமாகவே விசாரணை தாமதமானதாக குடிவரவு திணைக்களம் கூறி உள்ளது.

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 23 வயதான Richard Charles Reed என்பவரை Qin னின் கணவனின் கொலை தொடர்பாக கனடிய போலீசார் கைது செய்திருந்தனர்.