கனடிய சீனர் மீது சீனாவில் ஊழல் வழக்கு

கனடிய சீனர் மீது சீனாவில் ஊழல் வழக்கு

சுமார் $6 பில்லியன் சொத்துக்களை கொண்ட Xiao Jianhua என்ற கனடிய சீனர் மீது சீனா ஊழல் வழக்குகளை இன்று திங்கள் தாக்கல் செய்துள்ளது. ஹாங் காங் நகரில் மறைந்து இருந்த நேரத்தில் அடையாளம் காணப்படாதோரால் 2017ம் ஆண்டு கடத்தப்பட்டு இருந்த இவர் தற்போது சீன போலீசாரின் கையில் உள்ளார்.

இவர் கடத்தப்பட்டு சுமார் 5 ஆண்டுகள் சென்றாலும் தற்போதே இவர் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இவர் ஒரு கனடியர் என்றபடியால் சீனாவில் உள்ள கனடிய தூதரகம் மேற்படி வழக்கில் சமூகம் கொள்ள கேட்டிருந்தது. ஆனால் சீனா அதற்கு மறுத்து உள்ளது. சீனாவில் பிறந்த இவர் சீன சட்டப்படி ஒரு சீனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பரவலான தொடர்புகளை கொண்டிருந்த இவர் பல அரசியல் புள்ளிகளின் சொத்துக்களை மறைக்க உதவினார் என்பதே இவர் மீதான குற்றச்சாட்டு. Tomorrow Group உட்பட இவரின் பல நிறுவங்களை சீன அரசு தற்போது கைப்பற்றி உள்ளது. தகவல் கிடைத்த இவர் ஹாங் காங் நகருக்கு ஓடி இருந்தார்.

இவரின் Tomorrow Group நிறுவனத்தின் கீழ் இயங்கிய Baoshang Bank 2019ம் ஆண்டு முறிந்து இருந்தது. அதனால் பலர் தம்து முதலீடுகளை இழந்து இருந்தனர்.

கனடிய குடியுரிமை கொண்ட இவருக்கு இவருக்கு கனடாவிலும், அமெரிக்காவிலும் சொத்துக்கள் உள்ளன. Antigua and Barbuda கடவுச்சீட்டையும் (passport) கொண்ட இவரிடம் ஒரு தனியார் விமானமும் உண்டு.