கனடிய பிரதமர் மீது வசைபாடும் ரம்ப்

G7

வடகொரிய தலைவர் கிம்மை சந்திக்க சிங்கப்பூர் சென்றுகொண்டிருக்கும் ரம்ப்
கனடிய பிரதமர் ரூடோ மீது இன்று வசைபாடியுள்ளார். அத்துடன் G7 அமர்வின் பின்னான கூட்டறிக்கைக்கு (Summit Communique) அமெரிக்கா வழங்கிய ஆதரவையும் பின்வாங்கினார் ரம்ப்.
.
ரம்ப்  கனடாவில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க முன்னரே G7 அமர்வு தனது கூட்டறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அறிக்கைக்கு அமெரிக்கா உட்பட அனைத்து G7 நாடுகளும் ஆதரவு வழங்கி இருந்தன.
.
பின்னர் பிரதமர் ரூடோ கனடா ஜூலை 1ஆம் திகதி முதல் அமெரிக்க பொருட்கள் மீது பதிலடி வரிகளை நடைமுறை செய்யும் திட்டத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் கூறியள்ளார். அமெரிக்கா கனடாவின் இரும்பு, அலுமினியம் போன்ற உலோகங்கள் மீது புதிய வரிகளை ஜூன் 1ஆம் திகதி முதல் நடைமுறை செய்ததற்கான பதிலடியே மேற்கூறிய கனடாவின் புதிய வரிகள்.
.
கனடாவின் புதிய வரி தொடர்பான ரூடோவின் கூற்று புதியது ஒன்றல்ல என்றாலும், ரம்ப் ரூடோவின் கூற்றால் விசனம் கொண்டு, ரூடோ மீது வசைபாடி உள்ளார். ரம்ப்  தனது கூற்றில் ரூடோ “நாணயம் அற்றவர்” (dishonest) என்றும் “உறுதி இல்லாதவர்” (weak) என்றும் கூறியுள்ளார்.
.
அத்துடன் அமெரிக்கா ஏற்கனவே ஆதரவு அளித்து, உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இருந்து அமெரிக்கா தனது ஆதரவை பின்வாங்குகிறது என்றும் கூறியுள்ளார் ரம்ப் .

.