கனடிய புஞ்சாபி பாடகர் இந்தியாவில் சுட்டு கொலை

கனடிய புஞ்சாபி பாடகர் இந்தியாவில் சுட்டு கொலை

Sidhu Moose என்ற கனடிய புஞ்சாபி பாடகர் இந்தியாவின் புஞ்சாப் மாநிலத்தில் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். தற்பொழுது 28 வயதுடைய இவர் 2016ம் ஆண்டு கனடா சென்று Toronto நகரை அண்டிய Brampton பகுதியில் வாழ்ந்தவர். இவர் கொலையை சட்டவிரோத குழுக்களின் செயல் என்கிறது இந்திய போலீஸ். ஆனால் உண்மை விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

Sidhu தனது பாடல்களில் அரசியல், சமூக விசயங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இருந்தார். அத்துடன் கடந்த ஆண்டு இவர் இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்தும் இருந்தார். மேலும் அண்மையில் இடம்பெற்ற பிரதமர் மோதி தலைமையிலான அரசுக்கு எதிராக இடம்பெற்ற உழவர் ஆர்ப்பாட்டங்களும் இவர் பலத்த ஆதரவை தெரிவித்து இருந்தார்.

மூன்று வாகனங்களில் கொலைகாரர் வந்திருந்தனர் என்றும் ஒரு வாகனம் Sidhu வின் வாகனத்துக்கு பின்னே வர, ஏனைய இரண்டும் பக்கங்களில் வந்து சுட்டதாக கூறப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:30 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறிய இவர் 5:30 மணிக்கு கொலை செய்யப்பட்டு உள்ளார்.

2022ம் ஆண்டு இவர் இடம்பெற்ற புஞ்சாப் தேர்தல் ஒன்றிலும் இவர் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை அடைந்து இருந்தார்.