கனடிய மசூதியில் 6 பேர் சுட்டுக்கொலை

QuebecCity

கனடாவின் கியூபெக் மாகாணத்து தலைநகரான Quebec Cityயில் உள்ள மசூதி ஒன்றில் ஞாயிறு இரவு நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதல் ஒன்றுக்கு 6 பேர் பலியாகியும், 8 காயமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு காரணியானவர் என்று கருதப்படும் இருவர் கைதும் செய்யப்படு உள்ளனர் என்று போலீசார் கூறியுள்ளனர்.
.
ஞாயிறு இரவு சுமார் 8:00 மணியளவில் Quebec Cityக்கு புறநகராக உள்ள Sainte Foy பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் 80 முதல் 100 வரையான முஸ்லிம்கள் தொழுகையில் உள்ளபோது சில துப்பாக்கி தரித்தோர் நுழைந்து தொழுகையில் இருந்தோரை சுட ஆரம்பித்தனராம்.
.
இந்த தாக்குதல் நினைவு கூறும் பொருட்டு Quebec மாகாணம் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடும் என்று அம்மாகாண முதல்வர் Phillippe Couillard கனடாவின் பிரெஞ்ச் மாநிலமான Quebecகின் மிக பெரிய நகரம் Montreal என்றாலும், அம்மாகாண தலைநகர் Quebec City ஆகும்.
.

கனடிய பிரதமரும் இந்த தாக்குதலை ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று கூறியுள்ளார்.
.