கனடிய வீட்டு விலை ஏற்றத்துக்கு கள்ள பணமும் காரணம்

கனடிய வீட்டு விலை ஏற்றத்துக்கு கள்ள பணமும் காரணம்

கனடிய மத்திய அரசின் anti-money laundering திணைக்களம் தரமற்றது (ineffective) என்று British Columbia மாநிலத்தின் அறிக்கை ஒன்று இன்று புதன் கூறியுள்ளது. நீதிபதி Austin Cullen தயாரித்த இந்த அறிக்கை பதிலுக்கு British Columbia தனது சொந்த anti-money laundering அமைப்பை நடைமுறை செய்தல் அவசியம் என்றுள்ளது.

Cullen இந்த விசாரணையை 2019ம் ஆண்டு ஆரம்பித்து இருந்தார். அந்த விசாரணையின் முடிவிலேயே இன்று அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

உதாரணமாக 2006ம் ஆண்டு கனடாவுக்கு குடிவந்த Chen Runkai என்ற சீனர் சீனாவில் தனது ஆண்டு வருமானம் C$41,000 என்று கூறி இருந்தார். ஆனாலும் அவர் கனடா வந்த பின்னான சில ஆண்டுகளில் C$114 மில்லியன் வரை சீனாவில் இருந் கனடாவுக்கு எடுத்து இருந்தார். Chen சீனாவில் ஊழல் தொடர்பாக தேடப்பட்டவர் என்பது பின்னர் தெரியவந்தது.

2016ம் ஆண்டு கனடாவின் வான்கூவர் நகரில் இவர் C$15.6 மில்லியன் பெறுமதியான மாளிகை ஒன்றை பணத்துக்கு (mortgage இன்றி) கொள்வனவு செய்து இருந்தார். 2012ம் ஆண்டு இவரின் 25 வயது மகளும் mortgage உதவி இன்றி, பணத்துக்கு C$ 14 மில்லியன் பெறுமதியான மாளிகையை அதே இடத்தில் கொள்வனவு செய்து இருந்தார். இந்த கொள்வனவு காலத்தில் மகள் தனது தொழிலை மாணவி (student) என்றே பதிவு செய்திருந்தார்.

Chen 2007ம் ஆண்டு இன்னோர் வீடு ஒன்றை C$2.3 மில்லியன் பணத்துக்கு கொள்வனவு செய்து பின் $4.9 மில்லியனுக்கு விற்பனை செய்து இருந்தார்.

கனடிய அரசியல்வாதிகள் இந்த உண்மைகளை முடிந்தவரை மறைத்து வந்துள்ளனர். Chen இதுவரை Person A என்றும், அவரின் தாய் Person D என்றும் British Columbia அரசால் அழைக்கப்பட்டனர். சீன கள்ள காசு என்றாலும் கனடாவுக்கு நயம் தானே என்பதே இந்த அரசியல்வாதிகளின் கொள்கையாக இருந்துள்ளது.

சீனாவின் Lt. General பதவியில் இருந்த Gu Junshan என்பருக்கு ஊழல் காரணமாக சீனா மரண தண்டனை வழங்கி இருந்தது. Chen சுமார் 100 hectares நிலத்தை களவாக பெற Lt. ஜெனரல் Gu சட்டவிரோதமாக பணம் பெற்று உதவி இருந்தார். Chen அந்த நிலத்தை பின்னர் பெரும் தொகைக்கு விற்று இருந்தார். தான் சீன அதிகாரிகளிடம் அகப்பட இருந்ததை அறிந்த Chen கனடாவுக்கு தப்பி ஓடினார்.

Chen தனது பண நகர்த்தல்களை 5 கனடிய வங்கிகள் மூலம் செய்திருந்தாலும், UBS Canada என்ற வங்கி மட்டுமே சந்தேகத்தை 2011ம் ஆண்டு மத்திய அரசுக்கு அறிவித்து உள்ளது. CIBC, Royal Bank, HSBC, Bank of Montreal ஆகியன அரசுக்கு எந்தவித அறைவிப்பையும் செய்திருக்கவில்லை.

2020ம் ஆண்டு Criminal Intelligence Service of Canada வெளியிட்ட அறிக்கை ஆண்டுதோறும் சுமார் C$ 113 பில்லியன் கருப்பு பணம் கனடாவுக்கு வருவதாக கூறி உள்ளது.

கனடாவில் casino மற்றும் lottery வெற்றி பணத்திற்கு வருமான வரி இல்லை என்பது கள்ள பணம் நகர்தலுக்கு உதவியாக உள்ளது. சுமார் $15,000 வரையான கள்ள பணத்தை casinoவில் சூதாடுவதற்கு செலுத்தி, சில நூறுக்கு மட்டும் சூதாடி பின் மிகுதி பணத்தை தூய்மையான பணமாக பெறலாம்.