கமல் பிரச்சாரத்தில் இணைய ரஜனி மறுப்பு

KamalRajini

நடிகர் கமலஹாசன் அண்மையில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து இருந்தார். அந்த அரசியல் பிரவேசத்தின் ஒரு அங்கமாக, கமல் தமிநாடு மாநில அளவில் பிரச்சார நடவடிக்கை ஒன்றை புதன்கிழமை முதல், இராமநாதபுரத்தில் இருந்து மேற்கொள்ளவுள்ளார்.
.
இன்று ஞாயிறு ரஜனியின் Poes Garden வீடு சென்ற கமல், ராஜனியை தனது பிரச்சாரத்தில் இணைய அழைத்திருந்தார். ஆனால் அழைப்புக்கு நன்றி தெரிவித்த ரஜனி, தம் இருவரது பாணியும் வித்தியாசமானது (our styles are different) என்று கூறி, இணைய மறுத்துள்ளார்.
.
கமலின் அறிவிப்புக்கு முன், ரஜனியும் அரசியலில் புகுந்ததை அறிவித்து இருந்தவர். ரஜனியும் விரைவில் மாநிலம் முழுவதும் பிரச்சார நடவைக்கைகளில் ஈடுபடவுள்ளார். பெப்ருவரி 21 ஆம் திகதி ரஜனி தனது கட்சி பெயரை அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
.

கமல் இராமநாதபுர பரமக்குடி பகுதியில் பிறந்தவர் 1954 ஆம் ஆண்டு பிறந்தவர்.
.