கம்போடியாவில் வென்றது தந்தை, பிரதமராவது மகன்

கம்போடியாவில் வென்றது தந்தை, பிரதமராவது மகன்

கம்போடியாவில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் வென்றது அங்கு சுமார் 40 ஆண்டுகள் ஆட்சி செய்யும் பிரதமர் Hun Sen, வயது 70. ஆனால் இவர் தனது மகனை அடுத்த மாதம் பிரதமர் ஆக்கவுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் Hun Sen தலைமையில் Cambodian People’s Party (CPP) மொத்தம் 125 ஆசனங்களில் 120 ஆசனங்களை வென்று இருந்தது. உண்மையில் அங்கு எதிர்க்கட்சிகள் முடக்கப்பட்டு உள்ளன. பல எதிர்க்கட்சி தலைவர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.

மேற்படி செய்தியை அறிவித்த தந்தை “நான் தியாகத்தை செய்ய வேண்டும், அத்துடன் பதவியை கைவிட வேண்டும் என்றுள்ளார் (I must sacrifice and relinquish power)” என்றுள்ளார். ஆனால் பதவியை கையளிப்பது மகனிடம்.

பிரதமர் பதவியை தந்தை கைவிட்டாலும் அவரே ஆளும் கட்சியின் தலைவர் ஆக பதவி வகிப்பார்.

Hun Sen அரசு சீனாவுடன் நெருங்கிய உறவை கொண்டது. இங்கு சனநாயகம் பெரிதளவில் இல்லை என்றாலும் Hun Sen ஆட்சியில் மக்களின் வருமானம் அதிகரித்து, சுகாதாரம், கல்வி வசதிகள், கட்டுமானம் ஆகியன வளர்ச்சி அடைந்து இருந்தன.

மகன் Hun Manet, வயது 45, தற்போது உதவி முப்படை தலைவர். கடந்த தேர்தலில் இவரும் வெற்றி அடைந்திருந்தார். இவர் அமெரிக்காவின் West Point இராணுவ கல்வி நிலையத்தில் பட்டதாரி ஆனவர். பின்னர் தனது master’s படிப்பை நியூ யார்க் பல்கலைக்கழகத்திலும், PhD படிப்பை University of Bristol இலும் பெற்றவர்.

பொதுவாக சர்வாதிகளின் பிள்ளைகளை படிப்பிப்பது மேற்கு நாடுகளே.