கருக்கலைப்பு உரிமையை கைவிடும் அமெரிக்க தேசிய சட்டம்

கருக்கலைப்பு உரிமையை கைவிடும் அமெரிக்க தேசிய சட்டம்

அமெரிக்காவின் உயர் நீதிமன்றம் (Supreme Court) இன்று தேசிய அளவில் கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டு வந்த உரிமையை கைவிட்டு உள்ளது. அமெரிக்க சரத்து (Constitution) கருக்கலைப்பு உரிமையை வழங்கவில்லை என்பதே தேசிய அளவில் நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு உரிமையை இன்று கைவிட காரணமாக காட்டப்பட்டுள்ளது. அதனால் கருக்கலைப்பு உரிமை இன்று முதல் மாநில அரசுகளின் கடமையாகிறது.

1973ம் ஆண்டு இடம்பெற்ற Roe v. Wade என்ற வழக்கின் தீர்ப்பே அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவிலான உரிமை ஆக்கியது. அந்த தீர்ப்பே இன்று கைவிடப்பட்டு (overturned) உள்ளது.

2020ம் ஆண்டு அமெரிக்காவில் 930,160 கருக்கலைப்புகள் இடம்பெற்றதாக Guttmacher Institute கூறுகிறது. இத்தொகை 2017ம் ஆண்டிலும் 8% அதிகம்.

இன்றைய தீர்ப்பை 6 நீதிபதிகள் ஆதரித்தும், 3 நீதிபதிகள் எதிர்த்தும் உள்ளனர். ஆதரித்தவர்களில் 3 நீதிபதிகள் Neil Gorsuch, Brett Kavanaugh, Amy Coney Barrett முன்னாள் சனாதிபதி ரம்பால் நியமிக்கப்பட்டவர்கள்.

மற்றைய விசயங்கள் போல் இதுவும் தற்போது அமெரிக்காவில் அரசியல் ஆகியுள்ளது. Democratic மாநிலங்கள் பொதுவாக கருக்கலைப்புக்கு ஆதரவாகவும், Republican மாநிலங்கள் பொதுவாக எதிர்ப்பாகவும் உள்ளன.

Georgia மாநிலம் இன்று heartbeat சட்டத்தை நடைமுறை செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அதாவது குழந்தையின் இதய துடிப்பு அறிந்த பின் கருக்கலைப்பு செய்ய முடியாது என்பதே இந்த சட்டம். இதய துடிப்பு சுமார் 6 கிழமைகளில் இடம்பெறும்.

Kentucky மாநிலமும் ஏறக்குறைய எல்லா கருக்கலைப்புகளையும் தடை செய்கிறது என்று அந்த மாநிலம் கூறியுள்ளது. South Dakota மாநிலமும் இன்று முதல் பெரும் தடைகளை விதிக்கிறது.