கரோனாவால் உலகுக்கு $14 டிரில்லியன் பொருளாதார பாதிப்பு

கரோனாவால் உலகுக்கு $14 டிரில்லியன் பொருளாதார பாதிப்பு

மூன்றாம் ஆண்டில் தொடர்ந்தும் பரவி வரும் கரோனா வைரஸ் 2024ம் ஆண்டு அளவில் உலக பொருளாதாரத்துக்கு சுமார் $14 டிரில்லியன் ($14,000 பில்லியன்) பாதிப்பை தோற்றுவித்து இருக்கும் என்று IMF இன்று செவ்வாய் கூறியுள்ளது.

அத்துடன் 2022ம் ஆண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சியின் அளவை 4.4% ஆகவும் குறைத்து கணிப்பிட்டு உள்ளது IMF. கடந்த ஆண்டில் 2022ம் ஆண்டுக்கான வளர்ச்சி 5.6% ஆக இருக்கும் என்று IMF கணித்து இருந்தது. ஆனாலும் அக்கணிப்பு தற்போது 1.2% ஆல் குறைக்கப்பட்டு உள்ளது.

விலைவாசி அதிகரிப்பதாலும், அதை கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வட்டி வீதத்தை அதிகரிப்பதும் பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்கும். அமெரிக்கா இந்த ஆண்டு 3 அல்லது 4 தடவைகள் வட்டியை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் 2021ம் ஆண்டில் 8.1% ஆக இருந்தாலும், 2022ம் ஆண்டில் அது 4.8% ஆக வீழ்ச்சி அடையும் என்று கணிக்கிறது IMF.