கரோனா ஊசி பெற்றவர்களுக்கு அஸ்ரேலியா அனுமதி

கரோனா ஊசி பெற்றவர்களுக்கு அஸ்ரேலியா அனுமதி

இரண்டு கரோனா தடுப்பு ஊசிகளை பெற்ற வெளிநாட்டவருக்கு அஸ்ரேலியாவுள் நுழைய பெப்ரவரி 21ம் திகதி முதல் அனுமதி வழங்கப்படவுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளின் பின் அஸ்ரேலியா வெளிநாட்டவரை அனுமதிக்கவுள்ளது.

உல்லாச பயணிகள் மட்டுமன்றி அங்கு கல்வி பயில விரும்பும் மாணவர்களையும் அழைக்கிறது அஸ்ரேலியா. சீனாவில் இருந்து பெருமளவு மாணவர் அஸ்ரேலியா செல்வதுண்டு.

நியூசிலாந்து, சிங்கப்பூர், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாட்டவர் ஏற்கனவே அஸ்ரேலியா செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்க, ஐரோப்பிய தடுப்பு மருந்துகள் மட்டுமா ஏற்றுக்கொள்ளப்படும், அல்லது சீன, ரஷ்ய தடுப்பு மருந்துகளும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது தெளிவாக கூறப்படவில்லை.

அஸ்ரேலியாவில் சுமார் 80% மக்கள் முற்றாக தடுப்பு மருந்து பெற்றுள்ளனர்.