கரோனா சாட்டில் மோதி அரசு அடக்குமுறை ஆட்சி

Modi

இந்தியாவின் மோதி அரசு கரோனா பரவலை காரணம் கூறி அடக்குமுறை முறை ஆட்சி செய்கிறது என்று அமெரிக்காவின் Washington Post பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த கட்டுரையின்படி மோதி அரசு குறிப்பாக பாரதீய ஜனதா கட்சிக்கு ஆராதவு இல்லாத பத்திரிகையாளர்களையே பெருமளவு இடருக்கு உள்ளாக்குகிறது.
.
கரோனா முடக்கத்தால் மக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர், வைத்தியம் தரமாக இல்லை, உணவு தட்டுப்பாடில் உள்ளனர், பொருளாதாரா இடரில் உள்ளனர் போன்ற செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளரே கடுமையான இடருக்குள் தள்ளப்பட்டு உள்ளனர்.
.
இதுவரை குறைந்தது 10 பத்திரிகையாளர் கைதும் செய்யப்பட்டு உள்ளனர் என்கிறது அந்த கட்டுரை.
.
Zubair Ahmed என்ற பத்திரிகையாளர் போதிய முக பாதுகாப்பு கவசம் இன்றி கரோனா வைராசை பரப்புகிறார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
.
Neeraj Shivhare என்ற பதிக்கையாளர் வருமானத்தை இழந்த பெண் ஒருவர் தனது குளிர்சாதன பெட்டியை விற்று அப்பணத்தில் அன்றாட பொருட்களை கொள்வனவு செய்கிறார் என்று வெளியிட்ட செய்திக்காக கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த செய்தி மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தும் என்பதே அரசு நீதிமன்றில் கூறிய காரணம்.
.
மோதி ஆட்சியில் குறைந்தது 200 பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் செய்யப்பட்டதாகவும், அதில் குறைந்தது 40 பேர் மரணமாகி உள்ளதாகவும் மேற்படி கட்டுரை கூறுகிறது. பின் வந்த கரோனா மேற்படி அரசியல் தாக்குதல்களை மறைக்க தற்போது பயன்படுத்தப்படுகிறது.
.