கரோனா தடுப்பு மருந்து வகைகள்

கரோனா தடுப்பு மருந்து வகைகள்

எல்லா தடுப்பு மருந்துகளும் பாதகமான வைரஸ் தொற்ற முனையும் பொழுது அதற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வல்லமையை உடலுக்கு முன்கூட்டியே வழங்குகின்றன. தடுப்பு மருந்துகள் பல வழிமுறைகளில் தடுப்பு வல்லமையை உடலுக்கு வழங்கலாம்.

கரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளிலும் பல வகைகள் உண்டு. அவற்றுள் சில பின்வருவன.

1) DNA அல்லது RNA Molecule வகை தடுப்பு மருந்து
இவ்வகை தடுப்பு மருந்துகள் DNA அல்லது RNA molecule மூலம் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட பாதகமான (கரோனா போன்ற) வைரசை கண்டறிந்து தாக்கி அளிப்பது என்ற அறிவை உடலுக்கு ஊட்டுகின்றன. இது ஒரு புதிய நுட்பம் (DNA/DeoxyriboNucleic Acid –> RNA/RiboNucleic Acid –> mRNA/messenger RNA)

கரோனாவுக்கு முன் எந்தவொரு DNA அல்லது RNA வகை தடுப்பு மருந்தும் இருந்திருக்கவில்லை.

Moderna (வெப்பநிலை: -25 முதல் -15 C) மற்றும் Pfizer (வெப்பநிலை: -80 முதல் -60 C) நிறுவனங்கள் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் இவ்வகை மருந்துகளே.

குறிப்பு: இந்த வகை மருந்துகள் எமது DNA (genetic) மீது பாதிப்பை உருவாக்குமா? இல்லை என்கிறது அமெரிக்க அரசு. இந்த புதிய DNA molecule நுட்பத்தை பயன்படுத்தும் மருத்துகளின் எண்ணிக்கை எதிர் காலங்களில் பெருகும் வாய்ப்பு உண்டு.

2) Viral Vector வகை தடுப்பு மருந்துகள்
இவ்வகை மருந்துகள் உயிருள்ள ஆனால் மனிதருக்கு பாதகம் அல்லாத வைரஸ் ஒன்றின் உள்ளே கரோனா போன்ற பாதகமான வைரசின் பகுதியை செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன.

இபோலா (Ebola) தடுப்பு மருந்து இந்த வகைக்கு சிறந்த உதாரணம்.

AstraZeneca (வெப்பநிலை: 2 முதல் 8 C) மற்றும் Johnson & Johnson (வெப்பநிலை: 2 முதல் 8 C) நிறுவனங்கள் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் இவ்வகையினதே. ரஷ்யாவின் Sputnik V (வெப்பநிலை: -18.5 C) தடுப்பு மருந்தும் இவ்வகையினதே.

குறிப்பு: AstraZeneca மற்றும் Johnson & Johnson மருந்துகள் blood clot காரணமாக சில நாடுகளில் தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளன.

3) Inactivated வகை (killed வகை) தடுப்பு மருந்து
இவ்வகை தடுப்பு மருந்துகள் மனிதனுக்கு பாதகமான கரோனா போன்ற வைரசை வெப்பம் அல்லது இரசாயனம் மூலம் கொலை செய்து உடலுள் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன.

ஊசி மூலம் ஏற்றப்படும் போலியோ (Polio) தடுப்பு மருந்து இந்த வகைக்கு சிறந்த உதாரணம்.

சீனாவின் Sinovac (வெப்பநிலை: 2 முதல் 8 C) மற்றும் Sinopharm (வெப்பநிலை: 2 முதல் 8 C) கரோனா தடுப்பு மருந்துகள் இவ்வகையினதே.

4) Live Attenuated வகை (weakened வகை) தடுப்பு மருந்து
இவ்வகை மருந்துகள் கரோனா போன்ற மனிதனுக்கு பாதகமான வைரசை முற்றாக கொலை செய்யாது, பகுதியாக அழித்து (வலுவிழந்த SARS-CoV-2 கரோனா வைரஸ்) , உடலுள் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன.

Measles தடுப்பு மருந்து, Chickenpox தடுப்பு மருந்து போன்றவை இவ்வகையினதே.

Indian Immunological நிறுவனம் இவ்வகை கரோனா தடுப்பு மருந்து ஒன்றை தயாரிக்க முனைகின்றது.

5) Sub-unit வகை தடுப்பு மருந்து
இவ்வகை தடுப்பு மருந்துகள் கரோனா போன்ற பாதகமான வைரசின் protein பகுதிகளை மட்டும் உடலுள் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன.