கரோனா விதிகளை மீறி விமானத்தில் திருமணம்

கரோனா விதிகளை மீறி விமானத்தில் திருமணம்

இந்தியாவை கரோனா கடுமையாக தாக்கும் இக்காலத்தில் அங்கு மக்கள் கூடல்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. தமிழ்நாட்டில் திருமணங்களுக்கு 50 பேர் மட்டுமே தற்போது அனுமதிக்கப்படுவர். இதை விரும்பாத இருவர் தமது திருமணத்தை 160 பேருடன் ஆகாயத்தில் செய்துள்ளனர்.

இவர்கள் SpiceJet விமான சேவைக்கு சொந்தமான Boeing 737 வகை விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, தமிழ்நாட்டு மதுரை விமான நிலையத்தில் மேலேறி, வானத்தில் திருமணத்தை செய்துள்ளனர். அந்த விமானம் பெங்களுர் வரை செல்ல வாடகைக்கு அமர்த்தப்பட்டு இருந்தது.

விமானம் பறக்கும் போது எந்தவித நிகழ்வுகளையும் செய்யக்கூடாது என்று தாம் கூறியதாக விமான சேவை கூறியுள்ளது. ஆனால் விமானத்தில் இடம்பெற்ற திருமண வீடியோக்கள் இணையம் எங்கும் பதிவாகி உள்ளன. இதை தற்போது அதிகாரிகள் விசாரணை செய்கின்றனர்.

இந்தியாவில் இதுவரை குறைந்தது 300,000 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஆனால் உண்மை தொகை பல மடங்காக இருக்கும் என்று நம்பப்படுகிறது.