கலிபோர்னியாவில் 6.4 அளவிலான நிலநடுக்கம்

கலிபோர்னியாவில் 6.4 அளவிலான நிலநடுக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் Eureka பகுதியில்  இன்று செவ்வாய் காலை 6.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. US Geological Survey அறிவிப்பின்படி நிலநடுக்கம் அதிகாலை 2:34 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

தொடரும் நடுக்கங்கள் (aftershocks) தொடர்பாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடுக்கத்தை மையம் கடற்கரையில் இருந்து சுமார் 7.5 மைல் தூரம் நாட்டின் உள்ளே அமைந்துள்ளது. நிலநடுக்கத்தில் 6.0 முதல் 6.9 வரையிலான அளவு Strong நடுக்கம் என கணிக்கப்படும். இந்த அளவு நடுக்கத்தில் இடத்துக்கு ஏற்ப பாதிப்பு அமையும்.

நிலநடுக்க மைய பகுதியில் சுமார் 1,387 பேரே வாழ்கின்றனர். அத்துடன் சனத்தொகை மிகையான Sacramento என்ற நகரம் சுமார் 280 மைல் தொலைவில் உள்ளது.

இன்றைய நடுக்கத்தின் பாதிப்பு விபரங்கள் இதுவரை முழுமையாக அறியப்படவில்லை. சில இடங்களில் பாலங்கள் உடைந்து உள்ளதாகவும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.