கலிபோர்னியா காட்டு தீக்கு 44 பேர் பலி

CaliWildfire

அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநிலத்தில் தற்போது இடம்பெறும் காட்டு தீக்கு இதுவரை குறைந்தது 44 பேர் பலியாகி உள்ளதாகவும், குறைந்தது 228 பேரின் இருப்பிடம் அறியப்படாது உள்ளதாகவும் கூறப்படுகிறது. Paradise என்ற இடத்து தீக்கு மட்டும் குறைத்து 6,800 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளன.
.
இம்மாநிலத்தில் இரண்டு இடங்களில் தீ பரவுகின்றன. Paradaise என்ற இடத்தில் பரவும் Camp Fire என்ற பெயர் கொண்ட தீ இதுவரை கலிபோனியாவில் இடம்பெற்ற அனைத்து தீகளிலும் பெரியது என்று கூறப்படுகிறது. இது அந்த மாநிலத்தின் வடக்கே இடம்பெறுகிறது. அதேவேளை மாநிலத்தின் தெற்கே Woolsey என்ற பெயர் கொண்ட தீ பரவுகிறது.
.
சுமார் 250,000 மக்கள் தீ ஆபத்து காரணமாக தமது இடங்களை விட்டு வெளியேறியும் உள்ளனர்.
.
Paradise தீக்கு சுமார் 111,000 ஏக்கர் பரப்பளவும், Woolsey தீக்கு 85,000 ஏக்கர் பரப்பளவும் எரிந்து நாசமாகி உள்ளன.
.
Los Angeles நகருக்கு அண்டிய பகுதியில் பரவும் Hill Fire என்ற இன்னோர் சிறிய தீக்கு 4,530 ஏக்கர் பரப்பளவு எரிந்துள்ளது.
.
அப்பகுதியில் காற்றின் வேகம் 110 km/h க்கும் அதிகமாக இருப்பதால் தீ வேகமாக மற்றைய இடங்களுக்கும் பரவி வருகிறது.
.
கண்டெடுக்கப்பட்ட உடல்களில் பலதை  அடையாளம் காண முடியாமல் உள்ளதால், DNA முறை மூலம் அவற்றை அடையாளம் காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

.