காசாவுக்கு நெருப்பு வைத்து, முள்ளிவாய்க்காலுக்கு ஊளையிடும் தமிழ் அடிவருடிகள்

காசாவுக்கு நெருப்பு வைத்து, முள்ளிவாய்க்காலுக்கு ஊளையிடும் தமிழ் அடிவருடிகள்

2024ம் ஆண்டும் கனடிய தமிழ் அரசியல் புள்ளிகளும், புள்ளிகளாக மாற துடிப்பவர்களும் தமது கனடிய பெரும்பான்மை அரசியல்வாதிகளுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் genocide பெயரில், 15 ஆண்டுகளின் பின்னும்,  ஊளையிட்டு உள்ளனர். இந்த ஊளையிடல் இடம்பெறுவது கனடா வருடிக்கொடுக்கும் இஸ்ரேலின் அரச படையினரின் காசா மீதான genocide இடம்பெறும் வேளையிலேயே.

நமது தமிழ் அரசியல் புள்ளிகள் எதோ தாம் கொள்கை பிடிப்பு உள்ளவர்களாக Facebook பேச்சு பேசினாலும், அவர்கள் உள்நோக்கம் சொந்த இலாபங்கள் மட்டுமே. இவர்களால் இலங்கை தமிழருக்கு எந்தவித பயனும் இல்லை. 1983ம் ஆண்டு கலவர காலத்தில் ஜே. ஆரின் ஆட்சியில் பதவிகளை கொண்டிருந்த தமிழ் அடிவருடிகள் போன்றவர்களே இவர்களும்.

ஆனாலும் இந்த ஆண்டுக்கான முள்ளிவாய்க்கால் genocide கொண்டாட்டம் சிறிது அடக்கியே கொண்டாடப்பட்டது, யாழ்பாணத்து கள்ள கல்யாணம் போல. காரணம் வாசலில் நிற்கும் pro-Palestine ஆர்ப்பாட்டங்கள். இந்த கனடிய அரசியல் புள்ளிகள் மீது இணையங்கள் எங்கும் காசா கேள்விக்கணைகள் ஏவப்பட்டுள்ளன, ஆனால் இவர்களிடம் இருந்து பதில் எதுவும் இல்லை. இவர்களால் பதில் கூற முடியாது. இவர்கள் உண்மையை கூறினால் இவர்கள் ஒட்டி வாழும் கனடிய கட்சிகள் இவர்களின் சுக வாழ்வை பறித்து, வீட்டுக்கு அனுப்பிவிடும்.

1983ம் ஆண்டு கலவரங்கள் இடம்பெற்ற நிலையிலும் ஜே.ஆர். அரசியல் தமிழ் அமைச்சர்கள் பதவியை தொடர்ந்தனர். அப்போது இவர்களை அடிவருடிகள் என்று அழைத்தவர்களே இன்று தாமாக முன்வந்து அடிவருடிகளாக வளைந்து, நெளிந்து போகிறார்கள். இவர்கள் எல்லோரும் வாழ்வது சொந்த நலன்களுக்காக மட்டுமே. 

Genocide கதைக்கும் எந்தவொரு மேற்கு நாட்டு தமிழ் அரசியல் புள்ளியும் காசா தொடர்பாக கருத்து கூறும் துணிவிருக்கா? இல்லவே இல்லை. இவர்களுக்கு பெரும்பான்மை காட்சிகள் வழங்கிய உரிமைகள் மேற்கை மையமாக கொண்ட கனடிய வெளியுறவு கொள்கைக்கு முரணாகாத வகையில் சில அனுமதிக்கப்பட்ட மூலைகளில் ஊளையிட மட்டுமே. பதிலுக்கு தமிழ் அரசியல் புள்ளிகள் தமிழ் வாக்குகளை சில்லறைக்கு பெற்று மொத்தமாக பெரும்பான்மை கட்சிகளுக்கு வழங்க வேண்டும்.

இலங்கை, ஈரான், சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகளை பார்த்து நீங்கள் தாராளமாக ஊளையிடலாம். ஆனால் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையிட்டு வாய் திறக்கவே கூடாது.

ஒரு மேற்கு நாட்டு அரசியல் ஆய்வாளர் கூறினார் வடகொரியாவில் ஒருவர் கிம் ஜாங்-உன் க்கு எதிராக பேசினால் அவர் செத்தார், சீனாவில் ஒருவர் சனாதிபதி சீக்கு எதிராக பேசினால் அவர் செத்தார், அவ்வாறே (கனடா உட்பட) மேற்கு நாடுகளில் ஒருவர் இஸ்ரேலுக்கு எதிராக பேசினால் அவர் செத்தார் என்று. இதற்கு இடையே நம்மவரின் ஆண்டுக்கு ஒரு முள்ளிவாய்க்கால் genocide கூத்து, அம்மனுக்கு ஆண்டுக்கொரு காத்தவராயன் கூத்து போல. (எனக்கு பயம் பயமாய் இருக்குதனே பெற்றவளே தாயே… மகனே, புலி வருடி மாமா கனடாவில் இருக்கும் போது உனக்கென்ன பயம்…)

காசாவில் கொடூரம் செய்யும் இராணுவத்திலும் இலங்கை இராணுவம் ‘குறைந்தது’ ஒரு படி மேல். இரு தரப்பும் செய்த அட்டூழியங்களை நியாமான மனதுடன் (அப்படி ஒன்று உங்களுக்கு இருந்தால்) பட்டியல் போட்டு பாருங்கள். காசாவிலும் வைத்தியசாலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன, பாடசாலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன, உணவுகள், மருந்துகள் தடுக்கப்படுகின்றன, அங்கு பலியானோரில் பெரும்பான்மையினர் பெண்களும், சிறுவர்களும்.

இலங்கை தமிழரின் காதில் பூ சுற்றும் கனடிய கட்சிகள் அவ்வாறே கனடிய சீக்கியர் காதுகளிலும் பூ சுற்றுகிறது. Liberal கட்சியிடம் 12 சீக்கிய ஆசனங்களும், Conservative கட்சியிடம் 2 சீக்கிய ஆசனங்களும் NDP கட்சியிடம் 1 சீக்கிய ஆசனமும் இருந்தால் அவர்களையும் ஊளையிட்டு அனுமதிப்பதில் அரசியல் இலாபம் உண்டு தானே.

ஆனால் இலங்கை தமிழ் போராட்டத்துக்கோ, சீக்கிய போராட்டத்துக்கோ கனடிய அரசு யூகிரேனுக்கு வாரி வழங்குவது போல் வழங்கவும் இல்லை, வழங்கப்போவதும் இல்லை, இவர்களுக்கு ஊளையிடும் அனுமதி மட்டுமே.

கனடிய பிரதமர் Trudeau இந்த ஆண்டு Tamil Genocide ‘கொண்டாட்டத்தில் “… Tens of thousands of Tamils tragically lost their lives, including at the massacre in Mullivaikal” என்று இந்த ஆண்டு மே 18ம் திகதி அறிக்கை விட்டுள்ளார். அவரால் காசாவில் இடம்பெறுவது massacre அல்ல என்று கூற முடியுமா? அல்லது கனடிய தமிழ் அரசியல் அடிவருடிகள் காசாவில் இடம்பெறுவது massacre அல்ல என்று கூற முடியுமா?

கனடிய மத்திய அரசு மட்டுமன்றி Ontario மாநில conservative அரசும், தமிழ் உறுப்பினர் உட்பட, அனைத்து உறுப்பினர்களையும் நிபந்தனை இன்றி இஸ்ரேலை ஆதரிக்க கையொப்பம் இட்டு ஆவணம் தயாரித்து உள்ளது. அதை மீறி முள்ளிவாய்க்காலுக்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக ஊளையிடும் தமிழ் அடிவருடிகள் காசா தொடர்பாக கருத்து கூற முடியாது.

இவர்கள் ஊரோடு ஒத்தோடி வாழ பிழைக்க தெரிந்தவர்கள். அதனால் தான் என்னவோ வன்னி காட்டவை கவி ஒன்று வெளிநாடு சென்றவர்கள் “தப்பி ஓடியவர்கள் நக்கிற நாய்கள்” என்று பாடியிருந்தார்.