காசா யுத்தத்தால் தடைப்படும் செங்கடல் கப்பல் பயணம்

காசா யுத்தத்தால் தடைப்படும் செங்கடல் கப்பல் பயணம்

காசாவில் இடம்பெறும் யுத்தம் செங்கடல் ஊடான கப்பல் போக்குவரத்தை தடைப்பட வைக்கிறது. யேமென் (Yemen) நாட்டின் Houthi இன ஆயுத குழு செங்கடல் ஊடு செல்லும் இஸ்ரேலில் பதிவு கொண்ட கப்பல்களையும், இஸ்ரேல் செல்லும் கப்பல்களையும் ஏவுகணைகள் கொண்டு தாக்குவதாலேயே இக்கடலில் கப்பல் போக்குவரத்துக்கு தடைபடுகிறது.

பலஸ்தீனருக்கு ஆதரவளிக்கும் நோக்குடனேயே Houthi ஆயுத குழு இந்த தாக்குதல்களை செய்கிறது. காசாவில் யுத்த நிறுத்தம் வந்தால் தாம் தாக்குதல்களை நிறுத்துவோம் என்கிறது Houthi ஆயுத குழு. இந்த குழுவுக்கு ஈரான் ஆயுத, பொருளாதார உதவிகளை வழங்குகிறது.

இப்பகுதில் உள்ள அமெரிக்க, பிரித்தானிய யுத்த கப்பல்கள் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க முனைந்தாலும் அது போதியதாக இல்லை.

அமெரிக்காவின் USS Carney என்ற யுத்த கப்பல் 14 ஆளில்லா விமான குண்டுகளை சுட்டு வீழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் HMS Diamond என்ற யுத்த கப்பலும் drone ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளது.

ஆபத்து காரணமாக MSC, Maersk, Hapag-Lloyd ஆகிய வர்த்தக கப்பல் சேவை நிறுவனங்கள் செங்கடல் ஊடு செல்வதை தவிர்க்க ஆரம்பித்துள்ளன.

உலகின் சுமார் 10% கப்பல் மூலமான வர்த்தகம் செங்கடல் மூலம் செய்யப்படுகிறது.