காளான் புற்றுநோயை 45% ஆல் குறைக்கும்

காளான் புற்றுநோயை 45% ஆல் குறைக்கும்

காளானை (mushroom) உண்பது புற்றுநோய் ஏற்படுவதை சுமார் 45% ஆல் குறைக்கும் என்கிறது அமெரிக்காவின் Pennsylvania State University ஆய்வு ஒன்று. தினமும் இரண்டு நடுத்தர அளவிலான காளானை உண்பது மேற்படி அளவிலான புற்றுநோய் தவிர்ப்புக்கு உதவுமாம்.

1966ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையான காலத்து 17 ஆய்வுகளின் தரவுகளை ஆய்ந்த பின்னரே இந்த கருத்தை மேற்படி ஆய்வுக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த ஆய்வுக்கு 19,500 புற்றுநோய் நோயாளிகளின் தவுகள் உள்ளடக்கப்பட்டு இருந்தன.

காளானில் vitamins, nutrients, antioxidants ஆகியவை அதிக அளவில் உள்ளன. Shiitake, oyster, maitake, cremini, portobello போன்ற காளான்களில் அதிக நன்மைகள் இருந்தாலும், எந்தவொரு காளானை உண்பதுவும் உரிய பயனை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் காளான் மருந்தாகவும் பயன்படுகிறது. அங்கு maitake காளான் diabetes மற்றும் hypertension நோயாளிகளுக்கு மருந்தாக வழங்கப்படுகிறது.