காஷ்மீரில் 17 இந்திய இராணுவம் பலி

Kashmir

சர்ச்சைக்குரிய இந்திய மாநிலமான காஷ்மீரில் தாக்குதல் ஒன்றுக்கு 17 இந்திய இராணுவம் பலியாகியுள்ளதாக இந்தியா கூறியுள்ளது. ஸ்ரீநகருக்கு மேற்கே, இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அண்மையில், உள்ள Uri என்ற இடத்தில் உள்ள இந்திய படை முகாம் மீதே தாக்குதல் இடம்பெற்று உள்ளது. இந்தியாவின் கூற்றுப்படி பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ஆயுததாரிகள் இந்த தாக்குதலை நடாத்தி உள்ளனர்.
.
இந்திய ஜெனரல் Ranbir Singh கூற்றுப்படி நான்கு அந்நியநாட்டு பயங்கரவாதிகள், பாகிஸ்தான் அடையாளங்கள் கொண்ட ஆயுதங்கள் பயன்படுத்தி இந்த தாக்குதலை நடாத்தி உள்ளனர். இந்த நான்கு தாக்குதல்காரர்களும் கொல்லப்பட்டு உள்ளனர்.
.

காஷ்மீரை இந்தியாவும், பாகிஸ்தானும் உரிமை கொண்டாடுகின்றன. இரண்டு துண்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ள காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், மறு பகுதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
.