காஷ்மீர் இந்துக்களுக்கு பா.ஜ. வழங்கும் அதிக ஆசனங்கள்

காஷ்மீர் இந்துக்களுக்கு பா.ஜ. வழங்கும் அதிக ஆசனங்கள்

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான தொகுதி ஆசனங்களை மாற்றி அமைக்கிறது மோதியின் மத்திய அரசு. இந்த மாற்றி அமைத்தலின் பிரதான நோக்கம் அங்குள்ள இந்துக்களுக்கு அதிக ஆசனங்களை வழங்குவதே.

இதுவரை ஜம்மு பகுதிக்கு 37 ஆசனங்களும், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு 46 ஆசனங்களும் இருந்தன. புதிய முறைப்படி ஜம்முவுக்கு 43 ஆசனங்களும், காஷ்மீர் பகுதிக்கு 47 ஆசனங்களும் இருக்கும்.

ஜம்மு பகுதி இந்துக்களை பெருமளவில் கொண்ட பகுதி. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி இஸ்லாமியரை பெருமளவில் கொண்ட பகுதி. 2014ம் ஆண்டு தேர்தலில் மொத்தம் 37 ஆசனங்களை கொண்ட ஜம்முவில் பா.ஜ. 25 ஆசனங்களை வென்று இருந்தது. ஆனால் காஷ்மீர் பகுதியில் பா.ஜ எந்தவொரு ஆசனத்தையும் வென்று இருக்கவில்லை.

ஜம்முவில் புதிதாக அமைக்கப்படும் புதிய 6 தொகுதிகளில் 5 தொகுதிகள் இந்துக்கள் வெல்லும் வாய்ப்பை கொண்டுள்ளன என்று கூறப்படுகிறது.

அத்துடன் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறிய Pandits என்ற இந்துக்களுக்கும் காஷ்மீர் பகுதியில் 2 ஆசனங்கள் ஒருதுக்கப்படுகிறது (nominated).

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்து சனத்தொகையின் 68.31% இஸ்லாமியர், 28.43% இந்துக்கள்.