கிம்-ரம்ப் சந்திப்பில் கிம்முக்கே அதிக வெற்றி

TrumpKim

நேற்று செய்வாய்க்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற்ற கிம்-ரம்ப் சந்திப்பில் அமோக பயன் அடைந்தது வடகொரிய தலைவர் கிம்மே. தன்னை ஒரு சிறந்த உடன்படிக்கை செய்பவர் (deal maker) என்று பறைசாற்றும் ரம்ப் அடைந்த பயன்கள் இதுவரை எதுவுமில்லை.
.
சர்வாதிகாரி, தன் மாமனை கொன்றவர், தன் சகோதரரை (half-brother) சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட இரசாயணம் வீசி மலேசியாவில் கொலை செய்தவர் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்ட கிம், உலகின் மிக பெரிய வல்லரசான அமெரிக்காவின் ஜனாதிபதியுடன் சமனாக அமர்ந்து பேச்சுக்கள் நடாத்தியது கிம்மின் முதல் வெற்றி.
.
கிம்-ரம்ப்  அமர்வின் பின் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் மொத்தம் நான்கு கருத்துக்கள் இருந்திருந்தாலும் அவை நான்கும் தெளிவான தரவுகளை கொண்டிராதவை.
.
ஆனால் பின்னர் ரம்ப் தான் அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து செய்யும் இராணுவ பயிற்சிகளை இடைநிறுத்துவதாகவும் கூறியுள்ளார். ரம்ப் அவ்வகை இராணுவ பயிற்சிகளை provocative என்றும் விபரித்துள்ளார். உண்மையில் அதே provocative என்ற   சொல்லை கூறித்தான் கிம் முன்னர் அமெரிக்க-தென்கொரிய கூட்டு இராணுவ பயிற்சிகளை சாடியிருந்தார். அமெரிக்க-தென்கொரிய கூட்டு இராணுவ பயிற்சிகளை இடைநிறுத்தப்பட்ட்தும் கிம்முக்கு கிடைத்த இரண்டாவது வெற்றியே. அத்துடன் இது சீனாவுக்கும் கிடைத்துள்ள ஒரு வெற்றியாகும்.
.
கிம் வடகொரியாவின் அணுவாயுத நடவடிக்கைகளை நிறுத்தி இருந்தாலும் அவை ரம்ப்-கிம் சந்திப்புக்கு முன்னரேயே இடம்பெற்றுள்ளன.
.

அமெரிக்காவும், வடகொரியாவும் தொடந்தும் பேச்சுக்களில் ஈடுபடும். ஆனால் அவை எவ்வளவு காலம் இழுபடும், என்ன பயனை வழங்கும் என்பதை பொறுத்திருந்தான் காணவேண்டும்.
.