கியூபா ஹோட்டல் வெடிப்புக்கு 18 பேர் பலி

கியூபா ஹோட்டல் வெடிப்புக்கு 18 பேர் பலி

கியூபாவின் தலைநகர் ஹவானாவில் (Havana) இன்று இடம்பெற்ற ஹோட்டல் வெடிப்புக்கு குறைந்தது 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 64 பேர் காயமடைந்தும் உள்ளனர். அங்கே தேடுதல் பணிகள் தொடர்கின்றன.

Hotel Saratoga என்ற இந்த ஹோட்டல் வெடிப்புக்கு எரிவாயு கசிவே காரணம் என்று கூறப்படுகிறது. அப்போது அங்கு எரிவாயு காவும் கனரக வாகனம் நிலைகொண்டிருந்தது.

மொத்தம் 96 அறைகளை கொண்ட இந்த 19ம் நூற்றாண்டு ஹோட்டல் தற்போது புனரமைப்பு வேலைகளில் உள்ளதால் இங்கு உல்லாச பயணிகள் எவரும் இருந்திருக்கவில்லை.

வெளிநாடுகளில் இருந்து கியூபா செல்லும் பிரதான நபர்கள் இந்த ஹோட்டலில் தங்குவது வளமை. இது அங்குள்ள அழகிய கட்டிடங்களில் ஒன்றாகும்.