குப்தாகளின் விமானத்தை தேடும் கனடிய EDC

BombardierGlobal6000

கனடாவின் Export Development Canada (EDC) கனடிய உற்பத்திகளை இலகுவில் சந்தைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு அரச கட்டுப்பாட்டு அமைப்பு. அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், கனடிய வரிப்பணம் EDCயின் செயல்பாடுகளுக்கு பயன்படுவது இல்லை.
.
கனடிய சிறு விமான தயாரிப்பு நிறுவனமான Bombardier தனது விமானங்களை விற்பனை செய்வதற்கும் EDCயின் உதவியை நாடுவது உண்டு.
.
இந்தியாவில் இருந்து தென் ஆபிரிக்கா சென்று செல்வந்தராகிய Ajay Gupta, Atul Gupta, Rajesh Gupta ஆகிய சகோதரர்களுக்கும் Bombardier ஒரு Global 6000 வகை ஆடம்பர விமானத்தை விற்பனை செய்திருந்தது. இந்த விமான கொள்வனவுக்கு தேவைப்பட்ட கடன் உதவியை EDC செய்த்திருந்தது. சுமார் U$ 60 மில்லியன் பெறுமதியான விமானத்துக்கு EDC $41 மில்லியன் கடன் வழங்கியுள்ளது.
.
பெரும் ஊழல்கள் காரணமாக குப்தா சகோதரர்கள் தற்போது தலைமறைவாகி உள்ளனர். அத்துடன் அவர்களின் Global 6000 விமானமும் மறைவாகி உள்ளது. விமானத்தில் உள்ள tracking உபகரணமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
.
இந்த விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது EDC. அந்த நடவடிக்கையின் ஒரு அங்கமாக, EDC தென் ஆபிரிக்க நீதிமன்றில் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது.
.
அண்மையில் முன்னாள் தென் ஆபிரிக்க ஜனாதிபதி Jacob Zuma பதவி இழக்க குப்தா குடும்ப தொடர்பான ஊழல்களும் காரணமாக இருந்தன.
.