குயாரத்தில் பா.ஜ. பெரும் வெற்றி, ஹிமாச்சலில் காங்கிரஸ்

குயாரத்தில் பா.ஜ. பெரும் வெற்றி, ஹிமாச்சலில் காங்கிரஸ்

தற்போது வெளிவரும் மாநில தேர்தல் முடிவுகளின்படி பிரதமர் மோதியின் மாநிலமான குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றி அடைகிறது.  அங்கு உள்ள மொத்தம் 182 ஆசனங்களில் சுமார் 160 ஆசனங்களை பா.ஜ. வெற்றி பெறும் என்று தெரிகிறது. காங்கிரஸ் கட்சி சுமார் 20 ஆசனங்களை மட்டுமே வெல்லும்.

குஜாரத்தில் இரண்டாம் நிலையில் இருக்கும் என்று நம்பப்பட்ட Aam AAdmi கட்சி (AAP) 5 ஆசனங்களை மட்டுமே வெல்லும்.

குஜராத்தில் பிரதமர் மோதியும், உள்துறை அமைச்சர் அமித் சாவும் கடுமையாக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு இருந்தனர்.

அதேவேளை ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சுமார் 40 ஆசனங்களை வெல்கிறது. பா.ஜ கட்சி இங்கே சுமார் 25 ஆசனங்களை மட்டுமே வெல்லும்.

1995ம் ஆண்டில் இருந்து குஜராத்தில் பா.ஜ. கட்சியே ஆட்சியில் உள்ளது. பிரதமர் ஆகும் முன் மோதியும் இங்கே முதலமைச்சராக பதவி வகித்தவர்.

இம்முறை வெற்றி காரணமாக பா.ஜ. கட்சி தொடர்ச்சியாக ஒரு மாநிலத்தை 32 ஆண்டுகள் ஆட்சி செய்யக்கூடும். இதற்கும் மேலாக Communist Party of India மட்டுமே 34 ஆண்டுகள் தொடர்ச்சியாக மேற்கு வங்கம் (West Bengal) மாநிலத்தை ஆண்டு இருந்தது.