குர்ரான் எரிப்பால் சுவீடனில் வன்முறை

குர்ரான் எரிப்பால் சுவீடனில் வன்முறை

Rasmus Paludan என்ற கடும்போக்கு வலதுசாரியும் குடிவரவாளரை எதிர்பவரும் இஸ்லாமிய குர்ரானை எரித்தால் சுவீடன் நகரங்களில் வன்முறைகள் தலைதூக்கி உள்ளன. இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

வியாழனும், வெள்ளியும் குறைந்தது 16 போலீசார் காயமடைந்து உள்ளனர்.

சனிக்கிழமை Malmo என்ற இடத்தில் பல வாகனங்கள் தீயிடப்பட்டு உள்ளன. ஞாயிற்றுக்கிழமை Norrkoping என்ற இடத்தில் வன்முறைகளுக்கு 3 பேர் காயமடைந்து உள்ளனர்.

Paludan தான் மேலும் பல தடவைகள் குரானை எரிக்க உள்ளதாக கூறியுள்ளார். இவர் 2020ம் ஆண்டும் 1 மாதாகாலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.