கூகிளும் 12,000 ஊழியரை பதவி நீக்குகிறது

கூகிளும் 12,000 ஊழியரை பதவி நீக்குகிறது

Google நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet என்ற நிறுவனம் 12,000 ஊழியரை பதவி நீக்கம் செய்யவுள்ளதாக இன்று வெள்ளி அறிவித்துள்ளது. இத்தொகை அந்த நிறுவன ஊழியர் தொகையின் 6% ஆகும்.

பதவி நீக்கம் செய்யப்படுவோர் மேலும் 4 மாத ஊதியமும், 6 மாதங்களுக்கு வைத்திய உதவிகளும் (health coverage) பெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

உலக பொருளாதார மந்த நிலை காரணமாக Google தேடுதல், YouTube போன்ற பிரிவுகளின் விளம்பர வருமானம் குறைந்து வருவதும் பதவி நீக்கலுக்கு காரணமாகும்.

இந்த அறிவிப்பு ஏனைய பல தொழில்நுட்ப நிறுவங்களின் பதவி நீக்கங்களை தொடர்கிறது. Microsoft நிறுவனம் ஏற்கனவே 10,000 பேரை பதவி நீக்க அறிவித்து உள்ளது.

HP, Salesforce ஆகிய நிறுவனங்களும் தமது ஊழியர் பலரை பதவி நீக்கம் செய்யவுள்ளதாக கூறியுள்ளன.