கென்யாவில் வெள்ளை ஒட்டக சிவிங்கி

Giraffe-White

ஆபிரிக்கா கண்டத்து கென்யா (Kenya) என்ற நாட்டில் உள்ள Ishaqbini Hirola சரணாலத்துக்கு அண்மையில் வெள்ளை நிற ஓட்டக சிவிங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வழமையாக சிவிங்கிகள் மண்ணிறத்திலும், வரைகளை கொண்டதாகவும் இருக்கும். ஆனால் இந்த தாய் சிவிங்கி வரைகள் இல்லாது, வெள்ளை நிறத்தில் இருந்துள்ளது.
.
இந்த தாய் சிவிங்கி அருகே அதன் சேய் சிவிங்கியும் நின்றுள்ளது. சேய் சிவிங்கி அங்கங்கே தாயை போல் வெள்ளை நிறத்தையும் மற்றைய இடங்களில் வழமையான சிவிங்கி போல் மண்ணிறத்தையும் கொண்டிருந்தது. இவை இரண்டுக்கும் அருகே ஒரு சாதாரண சிவிங்கியும் நின்றுள்ளது.
.
முன்னர் பறவைகள், சிங்கம், மயில், மரை போன்றனவும் இவ்வாறு வெள்ளை நிறத்தில் இருந்தமை காணப்பட்டுள்ளன.
.
உயிரினங்கள் தமது நிறங்களுக்கு உரிய காரணி குறைபாட்டால் (loss of pigmentation) இவ்வாறு வெள்ளை நிறத்தில் இருக்கின்றன என்கிறது விஞ்ஞானம். அதை leucism என்பர்.
.

உலகத்தில் தற்போது காணப்படும் மிருகங்களுள் சிவிங்கியே மிக உயர்ந்த மிருகம். இது சுமார் 20 அடி உயரம்வரை வளரலாம். வனத்தில் இது 25 வருடங்கள் வரை வாழும்.
.