கென்ய அகதி முகாமிலும் கனடா அறுவடை

கென்ய அகதி முகாமிலும் கனடா அறுவடை

கனடாவின் மத்திய அரசு மட்டுமன்றி மாநில அரசுகளும் உலகம் எங்கும் சென்று தமக்கு தேவையான பணியாளர்களை அறுவடை செய்கின்றன. Nova Scotia என்ற கனடிய மாநிலமும் அந்த மாநிலத்தில் உள்ள முதியோரை பராமரிக்க கென்ய (Kenya) அகதி முகாமில் இருந்து 65 பேரை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

நோவா ஸ்கொஸ்யா மாநில சுகாதார அமைச்சர் Michele Thompson இந்த செய்தியை தெரிவித்துள்ளார். இந்த அறுவடைக்கு நோவா ஸ்கொஸ்யா மாநிலத்தில் இருந்து ஒரு குழு கென்யா சென்றதாகவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். மாநிலத்தின் இந்த அறுவடை கனடிய மத்திய அரசின் ஆதரவு கொண்டது.

கனடா இவ்வாறு வறிய நாடுகளில் உள்ள ஒரு சில பயிற்றப்பட்டவர்களையம் அறுவடை செய்து சென்றால், அந்த வறிய நாடுகளில் உள்ளோரை யார் பராமரிப்பது என்ற கவலை கனடாவுக்கு இல்லை.

இந்த 65 பேருக்கும் கனடா,

1. Application மற்றும் boimetric கட்டணம் அறவிடாது

2. விண்ணப்பம் துரிதப்படுத்தப்படும், 6 மாதங்களில் கனடாவில் 

3. இவர்களின் பயணத்துக்கு முன்னான மருத்துவ சேவைகள் இலவசம்

4. பயண செலவுக்கு கடன் உதவி

இந்த அறுவடைக்கு ஐ.நா. வும் துணையாக உள்ளது.

பல சந்ததிகளாக உலகிற்கு marriage, family planning, childbearing என்றெல்லாம் பாண்டித்தியம் படிப்பிக்கும் கனடா போன்ற நாடுகள் அவர்களின் theory கள் பொய்யாக தற்போது வறிய நாடுகளுக்கு அறுவடை செய்ய படையெடுக்கின்றனர். பிறப்பில் இருந்து இறப்பு வரை தங்கள் ‘உரிமைகள்’ மட்டுமே வாழ்க்கை என்று வாழ்பவர்கள் தங்கள் ‘கடமைகளை’ செய்ய தவறியதால் இந்நிலை உருவாகுவதை ஏற்க மறுக்கின்றனர்.

கனடா போன்ற நாடுகளின் வறிய உலகம் மீதான கருணை, காருண்யம் அவ்வளவே.