கையாலாகாதவரின் Cairo Peace Summit பயனற்று முடிந்தது 

கையாலாகாதவரின் Cairo Peace Summit பயனற்று முடிந்தது 

உலகின் பல தலைவர்கள், பிரதான அதிகாரிகள் இன்று சனிக்கிழமை Cairo Summit for Peace என்ற தலைப்பில் காசா வன்முறைகளுக்கு தீர்வு காண எகிப்தின் தலைநகர் கைரோவில் கூடினர். ஆனால் இவர்களின் பெரும் அமர்வு தீர்வு எதுவும் இன்றி பயனற்று முடிந்துள்ளது.

ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், கட்டார், குவைத், துருக்கி, ஈராக், இத்தாலி, ஸ்பெயின், கிரேக்கம், சைப்பிரஸ், தென் ஆபிரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ், ஜப்பான், பிரித்தானியா, நோர்வே, ரஷ்யா, சீனா போன்ற பல நாடுகள் இந்த அமர்வில் கூடி இருந்தன.

ஆனால் இந்த அமர்வில் இஸ்ரேல் பங்கு கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவும் தனது உயர் அதிகாரிகளை அனுப்பி இருக்கவில்லை.

பெருமளவு அரபு நாடுகளை இந்த அமர்வு கொண்டிருந்தாலும் அவர்களில் சிலர் அமெரிக்க-இஸ்ரேல் பணத்தாலும், ஆயுத பலத்தாலும் பதவிக்கு வந்தவர்கள், பதவியை தொடர்ந்தும் கொண்டுள்ளவர்கள். இவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக கதைக்கலாம் ஆனால் செயற்பட்டால் இவர்களுக்கு ஆபத்து.

அமர்வுக்கு வந்திருந்த ஐரோப்பிய நாடுகள் வழமைபோல் இஸ்ரேல் “has the right to defend” என்று கூறினார். இவர்களின் அறிவுக்கு பலஸ்தீனர் “has NO right to defend”

ஜோர்டான் அரசர் இஸ்ரேல் செய்வது “is a war crime” என்று கூறினாலும், இவர் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டின் உதவி இன்றி பதவியில் இருப்பது கடினம். இஸ்ரேலுடன் முண்டியடித்து உறவு கொண்டாடிய நாடுகளில் ஒன்று ஜோர்டான்.

அதேவேளை லண்டன் நகரில் இடம்பெற்ற பலஸ்தீனர் ஆதரவு ஊர்வலத்தில் குறைந்தது 100,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.