கொரியா, வியட்னாம் வரிசையில் சிரியா?

Syria

சிரியாவில் இருந்து வந்தது அசாட் தலைமயிலான ஓர் சர்வாதிகார ஆட்சி. இது ஒரு சர்வாதிகார ஆட்சி என்றாலும், மேற்கு உறவாடும் மற்றைய மதிய கிழக்கு சர்வாதிகாரங்களையும் விட மக்களுக்கு சற்று அதிகம் சுதந்திரம் வழங்கிய நாடு. ஆனால் சிரியா (அத்துடன் ஈரானும்) இஸ்ரவேலுக்கு கட்டுபடாத நாடுகள். அதனால் அங்கு ஓர் பொம்மை ஆட்சியை அமைக்கும் முயற்சியில் இறங்கியது மேற்கு.
.
மேற்கின் ஆதரவில் உருவானது ஒரு ஆயுத குழு. மேற்கு பணம், ஆயுதம், பயிற்சி வழங்கி வளர்த்தது அந்த இயக்கத்தை. ஆனால் அந்த இயக்கம் அசாட்  ஆட்சியை விரைவில் அழிக்க முடியவில்லை. அப்போது ஈராக்கில் வளர்ந்த முஸ்லிம் தீவிரவாதிகளான IS சிரியாவில் பரவியது. அதன் காரணமாக அங்கு 3 தரப்புக்கள் உருவாகின. அம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதின.
.
சிரியாவுக்கு உதவியது ஈரானும் ரஷ்யாவும். மேற்கு ஆதரவு குழுவுக்கு உதவியது மேற்கும் சவுதி அரேபியாவும். IS க்கு எதிரான மேற்கின் விமான தாக்குதல் அமெரிக்கா தலைமையில் மேட்கொள்ளப்பட்டது.
.
இன்று ரஷ்யா முதல் முறையாக விமான தாக்குதல் ஒன்றை சிரியாவில் நடாத்தியது. ரஷ்யாவின் தாக்குதல் IS க்கு எதிராகவே இருக்கும் என்று மேற்கு நம்பியது. ஆனால் ரஷ்யா அமெரிக்க ஆதரவு குழுக்கள் மீதே தாக்குதல் நடாத்தியுள்ளது. இந்த தாக்குதல் Homs என்ற அமெரிக்க ஆதரவு குழுக்களின் கட்டுபாட்டில் உள்ள நகரிலேயே இடம்பெற்று உள்ளது. அங்கு 36 பேர் பலியானதாக கூறப்பட்டு உள்ளது. ரஷ்யாவின் அதிபர் பூட்டின் தாம் அசாட் அரசை பாதுகாக்க உள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.
.

ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அவசர பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இருதரப்பு யுத்த விமானக்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதை தவிர்க்க இரு தரப்பும் பின்வாங்குவது அவசியம்.
.