கொரோனாவின் மத்தியிலும் ரம்பின் தாராள பொய்கள்

USNS_Comfort

அரசியலில் உண்மை அற்ற தரவுகளை, பொய்களை குற்ற உணர்வுகள் எதுவும் இன்றி கூறுபவர் சனாதிபதி ரம்ப். அவரின் அந்த குணம் தற்போது கொரோனா விசயத்திலும் தொடர்கின்றது.
.
USNS Comfort (1,000 படுக்கைகள்), USNS Mercy (1,000 படுக்கைகள்) ஆகிய அமெரிக்க கடற்படையின் மருத்துவ கப்பல்கள் கொரோனா நோயாளிகளை பராமரிக்க ஒரு கிழமையளவுக்குள் செல்கின்றன என்று கடந்த புதன்கிழமை பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் ரம்ப் கூறி இருந்தார்.
.
ஆனால் USNS Comfort என்ற கப்பல் தற்போது Virginia மாநிலத்தில் உள்ள Norfolk தளத்தில் திருத்த வேலைகளில் உள்ளது. இது சேவைக்கு வர குறைந்தது பல கிழமைகள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. San Diego தளத்தில் உள்ள Mercy என்ற கப்பல் வைத்தியர்கள், தாதிகள் அனைவரையும் எடுத்து சேவைக்கு செல்ல பல நாட்கள் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
.
மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் மருந்தான hydroxychloroquine கொரோனா நோய்க்கு மருந்தாக அமெரிக்காவின் FDA (Food and Drug Administration) அங்கீகரித்து உள்ளது (approved) என்றும் கூறினார் ரம்ப். ஆனால் இந்த மருந்து இதுவரை கொரோனாவுக்கு அங்கீகரிக்கப்படவில்லை. இந்த மருந்து தற்போதும் பரிசோதனை நிலையிலேயே (clinical trial) உள்ளது என்றுள்ளார் FDA அதிகாரி Stephen Hahn. பரிசோதனை சாதகமாக அமைந்தால் மட்டுமே FDA அங்கீகாரம் வழங்கும். அதற்கு பல மாதங்கள் தேவைப்படும்.
.
ரம்ப் வெள்ளிக்கிழமை மீண்டும் hydroxychloroquine கொரோனாவுக்கு சிறந்த மருந்தென கூற, உடன் இருந்த Dr. Anthony Fauci அந்த மருந்து தொடர்பாக மேலும் clinical trial செய்யப்படவேண்டும் என்று கூறினார்.
.
Google தலைமையில் 1,700 engineers கொரோனா தரவுகளுக்கு ஒரு web தயாரிப்பதாகவும் ரம்ப் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார். ஆனால் Google ரம்பின் கூற்றை அரைகுறையாக மறுத்து, தமது பங்காளி நிறுவனமான Verily அந்த web அமைப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி உள்ளது. அதேவேளை Verily தாம் தற்போது San Francisco பகுதிக்கு மட்டுமே சேவை செய்வதாக கூறி உள்ளது.
.
கொரோனா அமெரிக்காவுக்கு வராது என்ற எண்ணத்தில் இருந்த ரம்ப் தற்போது செய்வது அறியாது உள்ளார். அத்துடன் தனது தவறுகளுக்கு மற்றவர்களையும், மற்ற நாடுகளையும் பழிகூற முனைகிறார்.
.