கொழும்புக்கு அருகே X-Press Pearl கப்பல் தீயில், பணியாளர் நீங்கினர்

கொழும்புக்கு அருகே X-Press Pearl கப்பல் தீயில், பணியாளர் நீங்கினர்

கொழும்பு துறைமுகத்துக்கு அருகே தீ பற்றிக்கொண்ட X-Press Pearl என்ற கொள்கலன் கப்பலில் இருந்து 25 பணியாளர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். எரியும் கப்பல் கொழும்பில் இருந்து சுமார் 9.5 கடல்மைல் தூரத்தில் உள்ளது.

இந்த கப்பலில் கடந்த வியாழன் (20ம் திகதி) தீ பரவ ஆரம்பித்து இருந்தாலும், அதை கட்டுப்படுத்தியதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால் அந்த தீ மீண்டும் பரவ ஆரம்பித்து, தற்போது கப்பலோடிகளின் கூடங்களையும் (bridge) தாக்கும் நிலையில் உள்ளது.

இந்த கப்பலில் 1,486 கொள்கலன்கள் உள்ளதாகவும், சிலவற்றில் மொத்தம் 25 தொன் Nitric Acid மற்றும் வேறு இரசாயணங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த இரசயாணங்கள் தாக்கமுற்றே தீ பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த இரசாயனங்கள் மும்பைக்கு வடக்கே உள்ள இந்தியாவின் Hazira துறைமுகத்தில் ஏற்றப்பட்டவை.

இந்த தீயை கட்டுப்படுத்தி, கப்பலை மீட்க வந்திருந்த SMIT என்ற நிறுவனத்தினரும் ஆபத்து காரணமாக தற்போது கப்பலை விட்டு நீங்கி உள்ளனர்.

எரியும் கப்பல் வலது பக்கத்தில் சாய ஆரம்பித்து உள்ளதால், சில கொள்கலன்கள் கடலுள் வீழ்ந்து உள்ளன. இக்கப்பலில் இருந்து எண்ணெய்கள் கசியலாம் என்றும் நம்பப்படுகிறது. இந்த எண்ணெய் கசிவு நடுத்தரமான Tier II வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் Vaibhav, Vajira ஆகிய இரண்டு கடலோரா காவல் (Indian Coast Guard) கப்பல்கள் இப்பகுதிக்கு விரைந்துள்ளன.

MV X-Press Pearl என்ற இந்த கப்பல் சிங்கப்பூரை தளமாக கொண்ட X-Press Feeders Group என்ற நிறுவனத்துக்கு உரியது.