கொழும்புக்கு மீண்டும் Air France, KLM விமான சேவைகள்

கொழும்புக்கு மீண்டும் Air France, KLM விமான சேவைகள்

COVID காலத்தில் சேவைகளை நிறுத்திய பிரான்சின் Air France விமான சேவையும், ஜேர்மனியின் KLM (Royal Dutch Airlines) விமான சேவையும் மீண்டு கொழும்புக்கு சேவைகளை ஆரம்பிக்க உள்ளன.

நவம்பர் மாதம் 4ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கும் இந்த விமான சேவைகள் ஆரம்பத்தில் கிழமைக்கு 4 சேவைகளை மட்டுமே கொண்டிருக்கும்.

Air France சேவை AF 268 என்ற சேவை குறியீட்டை (flight number) கொண்டிருக்கும். AF 268 என்ற இந்த சேவை பரிஸ் நகரில் இருந்து மாலைதீவு சென்று, அங்கு இரண்டு மணித்தியாலங்கள் தரித்து பின் கொழும்பு செல்லும். ஆனால் கொழும்பில் இருந்து பரிஸ் நகருக்கான சேவை மாலை தீவு செல்லாது நேரடியாக பரிஸ் செல்லும்.

இந்த அறிவிப்பு தற்போதே வெளிவந்தாலும், இந்த சேவைகளுக்கான ஆசனங்கள் ஏற்கனவே வேறு கூட்டு விமான சேவைகள் (code-share) மூலம் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

மேலதிக விமான சேவைகள் தமது சேவைகளை ஆரம்பிப்பது பயண செலவை படிப்படியாக குறைக்கும்.