சட்டத்தின் காதில் பூ வைக்கும் Red Bull வாரிசு

Varayuth

உலகின் பிரபல Red Bull குளிர்பான தாபகரின் பேரனை கைது செய்ய இன்று தாய்லாந்து நீதிமன்றம் கட்டளை விடுத்துள்ளது. விலை உயர்ந்த காரான Ferrari ஒன்றில் சென்ற Vorayuth Yoovidhya என்ற இந்த Red Bull வாரிசு 2012 ஆம் ஆண்டில் மோட்டார்சைக்கிளில் சென்ற போலீசார் ஒருவரை பின்னாலே மோதிவிட்டு தப்பி ஒட்டியுள்ளார். அப்போது அவரது வயது 27. மோதுண்ட போலீசார் மரணமாகி விட்டார்.
.
தனது பண பலத்தாலும், உயர்மட்ட தொடர்பு பலத்தாலும் இன்றுவரை Vorayuth சட்டத்தை ஏமாற்றி வந்துள்ளார் இந்த வாரிசு. ஒவ்வொரு நீதிமன்ற அழைப்பின்போதும் தான் வெளிநாடு சென்றுள்ளதாகவும், நோய்வாய்ப்பட்டு உள்ளதாகவும் கூறி காலத்தை இழுத்தடித்து வந்துள்ளார். இறுதியாக நேற்று வியாழன் இவர் நீதிமன்றம் செல்லாது இருந்துள்ளார். அதன் பின்னரே இவ்வாறு கைதுக்கு கட்டளை விடப்பட்டு உள்ளது.
.
தற்போது இவர் பிரித்தானியாவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
.

இவரின் பாட்டனாரே பிரபல Red Bull குளிர்பான ஆரம்பகாரர். தாய்லாந்தில் ஆரம்பித்த இந்த பானத்தை இவரும் Austrian நாட்டவர் ஒருவரும் உலகம் எங்கும் பரப்பி உள்ளனர். இவர் 2012 ஆம் ஆண்டில் மரணித்தபோது சுமார் $20 பில்லியன் சொத்தை தனது 11 உறவினர்களுக்கு விட்டு சென்றுள்ளார்.
.