சதாம் மீதான புஷ்ஷின் யுத்த செலவு U$ 2.2 trillion

ஜோர்ஜ் புஷ் (George Bush) ஈராக்கிய சதாம் மீது நடாத்திய யுத்தம் காரணமாக அமெரிக்காவுக்கு ஏற்பட்ட மொத்த செலவு U$ 2.2 trillion என்கிறது Brown University யின் Watson Institute. இதில் யுத்தத்துக்காக நேரடியாக செலவிட்ட தொகை $1.7 trillion, யுத்தத்தால் பாதிக்கப்பட்டோரை 40 வருடங்கள் வரை பராமரிக்க கணிக்கப்பட்ட தொகை $490 பில்லியன்.

இந்த $ 2.2 trillion தொகையானது ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட தொகையின் சுமார் 40 மடங்காகும். அதாவது ஆரம்பத்தில் புஷ் குழு யுத்த செலவு சுமார் $50 முதல் 60 பில்லியன் வரையே இருக்கும் என கணித்திருந்தனர்.

இந்த அறிக்கை மேலும் கூறுகையில், இதுவரை சுமார் 134,000 ஈராக்கிய பொதுமக்களும், 4,488 அமெரிக்க இராணுவமும், 3,400 அமெரிக்க பணியாளர்களும் இந்த யுத்தத்தில் பலியாகியுள்ளனர்.