சந்திரனின் மறுபக்கம் போகவுள்ளது சீனா

MoonFarSide

சீனா சந்திரனின் மறுபக்கத்தில் அல்லது மறைந்துள்ள பக்கத்தில் விண்கலம் ஒன்றை விரைவில் இறக்கவுள்ளதாக இன்று கூறியுள்ளது. அவ்வாறு இன்றுவரை எந்த நாடும் செய்திருக்கவில்லை.
.
பூமியில் இருந்து சந்திரனை பார்க்கும் எமக்கு எப்போதுமே சந்திரன் ஒரே மாதிரியாக இருக்கும். சந்திரன் பூமியை சுற்றும் அதேவேளை தனது அச்சு வழியே சுழன்றும் வருகிறது. அப்படி இருக்கையில் நாம் ஏன் சந்திரனின் மற்றைய பக்கங்களை பார்ப்பது கிடையாது?
.
சந்திரன் பூமியை சுற்ற சுமார் 27 நாட்கள் எடுக்கிறது. அதேவேளை தன்னை தானே சுற்றவும் சந்திரன் சுமார் 27 நாட்கள் எடுக்கிறது. இந்த இரண்டு காலமும் ஏறக்குறைய சமமாக இருப்பதால் சந்திரனின் ஒரு பக்கத்தை மட்டுமே பூமியில் உள்ள நாம் எப்போதும் காண்கிறோம். நாம் காணும் பக்கத்தை கிட்டிய பக்கம் (near side) என்றும், பார்க்க முடியாத பக்கத்தை அல்லது மறைந்த பக்கத்தை far side என்றும் கூறுவார்.
.
மறைந்துள்ள பக்கத்தில் விண்கலம் தரை இறங்குவதில் பெரியதோர் சிக்கல் உண்டு. அங்கிருந்தது விண்கலம் நேரடியாக பூமியுடன் தொலைத்தொடர்பு கொள்ள முடியாது. அவ்வாறு செய்வது சாமத்தில் சூரியனுக்கு signal செலுத்து முனைவது போன்றது. அதனாலேயே இதுவரை சந்திரனுக்கான எல்லா பயணங்களும் பூமிக்கு தெரியும் பக்கத்துக்கு (near side) மட்டுமே செய்யப்பட்டன.
.
சந்திரனின் மறைந்துள்ள பக்கத்தை dark side என்றும் சிலர் அழைப்பது உண்டு. ஆனால் அக்கருத்து தவறானது. சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும்போது மறைந்துள்ள பக்கம் நண்பகல் போல் பிரகாசமாக இருக்கும்.
.
படம்: சந்திரனின் மறைந்துள்ள பக்கம், NASA
.