சர்வாதிகாரி ஜெனரல் Noriega மரணம்

Noriega

1983 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டுவரை பனாமாவை (Panama) ஆண்ட சர்வாதிகாரி நோரியேகா (Manuel Noriega) திங்கள் இரவு பனாமா நகரில் உள்ள Santo Thomas வைத்தியசாலையில் காலமானார். இவர் ஆரம்பத்தில் CIAயின் கைக்கூலியாக இருந்து, பின் CIAயின் பகைமையால் அமெரிக்காவில் சிறை சென்றவர்.
.
1934 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1962 ஆம் ஆண்டில் பனாமா இராணுவத்தில் இணைந்து இருந்தார். 1968 ஆம் ஆண்டில் பனாமாவின் ஜெனரல் Omar Torrijos இராணுவ ஆட்சி கவிழ்ப்பு செய்து ஆட்சியை கைப்பற்றிய போது அவருக்கு உடந்தையா இருந்தவர் Noriega. அக்காலத்தில் Noriega CIAயுடன் நெருக்கமான உறவை வளர்த்தார்.
.
1981 ஆம் ஆண்டில் Omar Torrijos விமானம் சந்தேகத்து இடமான முறையில் வீழ்ந்தது. Omar அதில் பலியானார். இரண்டு வருடங்களின் பின், 1983 ஆம் ஆண்டில், CIAயின் உதவியுடன் Noriega ஆட்சியை கைப்பற்றி இருந்தார்.
.
Noriega அமெரிக்காவின் இரகசிய ஆயுத விற்பனைகளுக்கும் நடுவராக இருந்துள்ளார். CIAயுடன் மட்டுமன்றி Noriega கொலம்பியாவின் போதை கடத்தல் குழுக்களுடனும் உறவை வளர்த்து இலாபம் கொண்டார். தனக்கு தடையாக உள்ளோர் அனைவரையும் கொலை செய்தார்.
.

பிற்காலங்களில் CIA இவருடனான உறவை துண்டித்தது. 1989 ஆம் ஆண்டில் அமெரிக்கா பனாமாவுள் நுழைந்து Noriegaவை கைது செய்தது. போதை கடத்தல் வழக்கு விசாரணைகளின் பின் இவருக்கு அமெரிக்காவில் 20 வருட சிறை வழங்கப்பட்டது.
.
2010 ஆம் ஆண்டில் பிரான்ஸூக்கு பண ஊழல் விசாரணைக்காக கடத்தப்பட்டார். அங்கும் இவர் குற்றவாளியாக காணப்பட்டு சிறை சென்றார். ஒருவருட சிறையின் பின் இவர் மீண்டும் பனாமாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
.