சவுதியில் இன்று அவசர அரபு-இஸ்லாமிய மாநாடு

சவுதியில் இன்று அவசர அரபு-இஸ்லாமிய மாநாடு

அரபு-இஸ்லாமிய மாநாடு ஒன்றை சவுதி அரேபியா இன்று சனிக்கிழமை நிகழ்த்துகிறது. காசா யுத்தத்துக்கு தீர்வு ஒன்றை காண்பதே இந்த அவசர மாநாட்டின் நோக்கம். மத்திய கிழக்கில் தமது ஆளுமையை வெளிப்படுத்த இதுவே அவர்களுக்கு இறுதி சந்தர்ப்பமாக இருக்கும்.

அக்டோபர் 7ம் திகதி காமாஸ் செய்த தாக்குதல்களுக்கு சுமார் 1,400 இஸ்ரேலியர்களும், பின் இஸ்ரேல் செய்யும் தாக்குதல்களுக்கு 11,000 பலஸ்தீனர்களும் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவும்,மேற்கும் இஸ்ரேலின் கண்மூடித்தனமான ஆதரிப்பதை இஸ்லாமிய, அரபு நாடுகள் கண்டித்து வருகின்றன. ஆனால் கண்டிப்புக்கு அப்பால் அவர்கள் எதையும் செய்யவில்லை. இன்றைய அமர்வின் பயன் பின்னரே தெரியவரும்.

இந்த அமர்வுக்கு ஈரானின் சனாதிபதி Ebrahim Raisi யும் பயணிக்கிறார். அண்மையில் சீனா சவுதிக்கும், ஈரானுக்கும் இடையில் உறவை ஏற்படுத்தியது ஈரான் சனாதிபதி சவுதி செல்ல வழி வகுத்து உள்ளது.

அண்மையில் இஸ்ரேலுடன் உறவை ஆரம்பித்த UAE, Bahrain ஆகிய நாடுகளும் தற்போது ஒரு குழப்பமான நிலையில் உள்ளன. சவுதியும் இஸ்ரேலுடன் உறவை ஆரம்பிக்க இருந்தது. ஆனால் அது ஹமாஸ் தாக்குதலின் பின் அந்த நகர்வு தடைப்பட்டு உள்ளது.

அதேவேளை அமெரிக்காவும், மேற்கும் இஸ்ரேலை மெல்ல சாட ஆரம்பித்து உள்ளன. அமெரிக்க வெளியுறவு செயலாளர் அளவுக்கு அதிகமான (far too many) பலஸ்தீனர் பலியாகி உள்ளதாக நேற்று கூறியுள்ளார். பிரென்சு சனாதிபதி இஸ்ரேல் பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்வதை நிறுத்தல் அவசியம் என்றுள்ளார்.