சவுதியில் புதிய விமான சேவை, விமான நிலையம்

சவுதியில் புதிய விமான சேவை, விமான நிலையம்

சவுதி அரேபியாவில் 6 ஓடு பாதைகளை (runways) கொண்ட பெரிய அளவிலான விமானம் நிலையம் ஒன்று Riyadh நகரில் அமைக்கப்பட உள்ளதாக சவுதி இளவரசர் Mohammed bin Salman இன்று திங்கள் கூறியுள்ளார். இந்த விமான சேவையை தளமாக கொண்டு விமான சேவை செய்ய Riyadh International Airlines (RIA) என்ற புதிய விமான சேவையும் ஆரம்பிக்கப்படும்.

இந்த திட்டத்துக்கு சவுதி $30 பில்லியன் பணத்தை செலவிடும்.

ஏற்கனவே மத்திய கிழக்கில் Dubai நகரை தளமாக கொண்ட Emirates விமான சேவையுடனும், காட்டாரை தளமாக கொண்ட Qatar விமான சேவையுடனும், அபுதாபியை தளமாக கொண்ட Etihad விமான சேவையுடனும் சவுதியின் புதிய RIA விமான சேவை நேரடியாக போட்டியிடும். இதனால் விமான பயண செலவு குறைவடையலாம்.

RIA விமான சேவை இந்த ஆண்டின் இறுதி முதல் மெல்ல ஆரம்பித்தாலும், புதிய விமான நிலைய கடுமையான வேலைகளுக்கு பல ஆண்டுகள் தேவைப்படும். RIA முதலில் 40 Airbus 350s வகை விமானங்களை கொள்வனவு செய்யும்.

King Salman International Airport என்ற புதிய விமான நிலையம் தற்போது பாவனையில் உள்ள King Khaled விமான நிலையத்தை உள்ளடக்கி கட்டப்படும். புதிய விமான நிலையம் 2030ம் ஆண்டில் 120 மில்லியன் பயணிகளை கையாள வசதிகளை கொண்டிருக்கும்.

தற்போது சவுதியில் இயங்கும் Saudia விமான சேவை Jeddah நகரை தளமாக கொண்டு தொடர்ந்தும் இயங்கும்.

தற்போது Chicago O’hare விமான நிலையத்தில் 8 ஓடு பாதைகளும், Dallas விமான நிலையத்தில் 7 ஓடு பாதைகளும், Denver, Detroit, Amsterdam ஆகிய நிலையங்களில் 6 ஓடு பாதைகளும் உள்ளன.

இதுவரை கட்டார் FIFA 2022 கட்டுமானங்களில் பணி செய்தோர்க்கு சவுதி விமான நிலைய கட்டுமானம் மேலும் வேலைவாய்ப்பை வழங்கலாம்.