சவுதியில் 30 பதவிகளுக்கு 28,000 பெண்கள் விண்ணப்பம்

சவுதியில் 30 பதவிகளுக்கு 28,000 பெண்கள் விண்ணப்பம்

சவுதி அரேபியா அண்மை காலங்களில் பெண்களை பொது பணிகளுக்கு அமர்த்த முன்வந்துள்ளது. அதன்படி 30 பெண் ரயில் சாரதிகளை பணிக்கு அமர்த்த முன்வந்தது. அந்த 30 இடங்களுக்கு மொத்தம் 28,000 சவுதி பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

இந்த சாரதிகள் சவுதி நகரங்களான Mecca வுக்கும் Medina வுக்கும் இடையில் அதிவேக ரயில்களை செலுத்துவர். இவ்வகை பணிகளுக்கு பெண்கள் அமர்த்தப்படுவது இதுவே முதல் தடவை.

மேற்படி ரயில் சேவையை சவுதியில் இயக்கவுள்ள ஸ்பெயின் நாட்டு நிறுவனமான Renfe இந்த விளம்பரத்தை செய்துள்ளது. இந்த பதவிக்கு தேவைப்படும் தகைமைகளில் ஆங்கில அறிவும் ஒன்று.

2018ம் ஆண்டே சவுதியில் பெண்கள் வாகனம் செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.