சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் கைது, இலஞ்சம் காரணம்

சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் கைது, இலஞ்சம் காரணம்

சிங்கப்பூர் அமைச்சரான சுப்பிரமணியம் ஈஸ்வரன் இலஞ்ச குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மீது 27 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இவர் மொத்தம் $160,000 பெறுமதியான விமான பயணம், விடுதி, Grand Prix formula 1 அனுமதி ஆகியவற்றை இலவசமாக Ong Beng Seng என்ற வர்த்தகரிடம் இருந்து பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இவர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். அதேவேளை தனது அமைச்சர் பதவியையும் விட்டு நேற்று வியாழன் விலகியுள்ளார். 

பொதுவாக ஆசியாவில் இலஞ்சம், ஊழல் அற்ற அரசியல்வாதிகளை கொண்ட சிங்கப்பூர் ஈஸ்வரன் கைதால் வியப்பில் ஆழ்ந்துள்ளது.

ஈஸ்வரன் Trade and Industry அமைச்சராக பதவி வகித்த காலத்திலேயே மேற்படி இலஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. அக்காலத்திலேயே சிங்கப்பூர் Grand Prix காரோட்ட போட்டியை நிகழ்த்தி இருந்தது.

இதற்கு முன் 1986ம் ஆண்டு Teh Cheang என்ற அமைச்சர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆரம்பமாகி இருந்தது. ஆனால் அவர் கைதுக்கு முன் தற்கொலை செய்திருந்தார்.