சிங்கப்பூர்-கோலாலம்பூர் இடையே கூடிய விமான சேவைகள்

 

கடந்த வருடம் அதிகூடிய விமான சேவைகள் சிங்கப்பூர் விமான நிலையத்துக்கும், மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கும் இடையில் இடம்பெற்று உள்ளதாக OAG Aviation என்ற விமான சேவைகள் தரவு நிலையம் கூறுகிறது. அத்துடன் உலகின் அதிகூடிய விமான சேவைகள் தம்மிடையே கொண்ட முதல் 10 விமான நிலைய இரணைகளில், Toronto (YYZ) – New York (LGA) இரணை மட்டுமே ஆசியாவுக்கு வெளியே உள்ளது.
.
சிங்கப்பூர் விமான நிலையத்துக்கும், கோலாலம்பூர் விமான நிலையத்துக்கும் இடையே கடந்த வருடம் 30,537 விமான சேவைகள் இடம்பெற்று உள்ளன. அதாவது ஒவ்வொரு நாளும் சராசரியாக 84 சேவைகள் இந்த இரண்டு விமான நிலையங்களுக்கும் இடையில் இடம்பெற்று உள்ளது.
.
இந்த இரண்டு விமான நிலையங்களுக்கு இடையில் அதிகூடிய எண்ணிக்கையிலான விமானங்கள் பறந்திருந்தாலும், இந்த விமானங்களுள் பல நடுத்தர அல்லது சிறிய விமானங்கள் என்றபடியால், இந்த இரண்டு விமான நிலையங்களுக்கும் இடையில் பயணித்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை அதிகம் அல்ல.
.

தரவுகள் OAG Aviation
.2017_Flights