சிரியாவின் ஆயுத குழுக்களை கைவிட்டது அமெரிக்கா

Syria

தான் பாலூட்டி வளர்த்த சிரியாவின் அரச எதிர்ப்பு ஆயுத குழுக்களை அமெரிக்காவின் டிரம்ப் அரசு இன்று கைவிட்டுள்ளது. CIAயின் உதவியுடன் ஜோர்டான் மூலம் வளர்த்த சிரியாவின் ஆயுத குழுக்களையே டிரம்ப் அரசு இன்று கைவிட்டுள்ளது.
.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா எதிர்ப்பு நாடான சிரியாவில் உள்ள அசாத் அரசை புரட்சி மூலம் கவிழ்த்து பின் தமது கட்டுப்பாட்டுள் இருக்கக்கூடிய அரசு ஒன்றை அமைக்கும் நோக்குடன் அமெரிக்காவும், மேற்கும் சிரியாவில் ஒரு புரட்சியை போராளிகள் மூலமாக ஆரம்பித்து, வளர்த்து வந்திருந்தன. போராளிகளும் வேகமாக பெருமளவு இடங்களை தமது கட்டுப்பாட்டுள் கொண்டு வந்தனர்.
.
ஆனால் காரியம் கைகூடுமுன் சிரியாவின் அரசுக்கு உதவ முன்வந்தது ரஷ்யா. ரஷ்யாவின் இராணுவ உதவியுடன் போராளிகளை பெருமளவில் முறியடித்தது சிரியாவின் அசாத் அரசு.
.
இந்நிலையிலேயே டிரம்ப் சிரியாவின் போராளிகளுக்கான CIA மூலமான ஆதரவுகளை நிறுத்துமாறு கூறியுள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கை ரஷ்யாவை சாந்தப்படுத்தவே என்று பலரும் கருதுகின்றனர்.
.
இந்நிலையில் கைவிடப்பட்ட போராளிகள் மேற்கொண்டு என்ன செய்வார்கள் என்று இதுவரை அறியப்படவில்லை.
.
தனது பெயரை பகிரங்கப்படுத்த விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் “Putin won in Syria” என்றுள்ளார்.
.

இலங்கையில் யுத்தத்தை வளர்த்த இந்தியாவும் தனது நோக்கங்கள் மாறிய பின் தமிழ் போராளிகளுக்கான ஆதரவுகளை நிறுத்தி இருந்தது.
.