சிரியாவில் அகதிகள் வள்ளம் கவிந்தது, 71 பேர் பலி

சிரியாவின் கடல் பகுதியில் அகதிகள் சென்ற வள்ளம் ஒன்று கவிழ்ந்து பலர் பலியாகி உள்ளனர். இதுவரை 71 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என்று சிரியாவின் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

அத்துடன் 20 பேர் காப்பாற்றப்படும் உள்ளனர். காப்பாற்றப்பட்டவர் வைத்தியம் பெற்று வருகின்றனர்.

வியாழக்கிழமை அமிழ்ந்த இந்த வள்ளத்தில் சுமார் 120 முதல் 150 பேர் வரை பயணித்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவர்களில் பலர் லெபனான், சிரியா, பலஸ்தீன் ஆகிய இடங்களில் இருந்து ஐரோப்பா செல்ல முயன்றவர் என்று கூறப்படுகிறது.

மேற்படி வள்ளம் Tripoli நகருக்கு அண்மையில் உள்ள Minyeh என்ற கடலோர லெபனான் நகரில் இருந்து சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சுமார் 1.5 மில்லியன் சிரியாவின் அகதிகள் மட்டும் லெபனானில் தங்கி உள்ளனர். வேறு நாட்டவரும் இங்கு அகதிகளாக உள்ளனர்.