சிரியாவில் நடைபெறும் யுத்தம் உலகை புதிய Cold War ஒன்றினுள் இழுப்பதாக ரஷ்யாவின் பிரதம மந்திரி Dmitry Medvedev கூறியுள்ளார். சனிக்கிழமை ஜேர்மன் நாட்டில் இடம்பெற்ற Munich Security Council அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
.
.
ரஷ்யாவின் இந்த கருத்தை உடனடியாக மறுத்துள்ளது NATO. NATOவின் கூட்டுப்படை கட்டளையாளர் ஜெனரல் Philip Breedlove “NATOவில் ஒருவரும் Cold War இக்கு மீண்டும் செல்ல விரும்பவில்லை” என்றுள்ளார்.
.
.
சிரியாவில் மேற்கும், ரஷ்யாவும் தமது ஆதிக்கங்களை நடைமுறைப்படுத்த முனைகின்றன. வருங்கால சிரியாவின் ஆட்சியில் அசாத்துக்கு இடமில்லை என்கிறது மேற்கு. அதையெல்லாம் தீர்மானிப்பது சிரியாவின் மக்கள் என்கிறது ரஷ்யா. அத்துடன் மேற்கு உருவாக்கிய Free Syrian Army என்ற ஆயுத குழுவை ரஷ்யாவின் விமான தாக்குதல்கள் பாரிய அளவில் பலவீனப்படுத்தியும் உள்ளது.
.
.
அதேவேளை Free Syrian Army என்ற குழுவை உருவாக்கிய சவுதி அரேபியா தமது யுத்த விமானங்களை துருக்கிக்கு நகர்த்தி உள்ளது. தாம் IS என்ற குழுவை தாக்கவே இவ்வாறு தமது விமானங்களை நகர்த்தியதாக கூறினாலும் சிரியா தரப்பு அதை நம்பவில்லை.
.
.