சிரியாவில் 13 ஈரான் இராணுவம் பலி

Syria

இன்று ஈரானின் Fars செய்தி நிறுவனம் வெயிட்ட அறிக்கை ஒன்றின்படி 13 ஈரானின் Revolutionary Guards உறுப்பினர் சிரியாவில் பலியாகி உள்ளனர். அத்துடன் 21 Revolutionary Guards உறுப்பினர் காயமடைந்தும் உள்ளானர். இவர்கள் Khan Touman என்ற சிரியாவின் நகர் ஒன்றில் அல்கைடா சார்பு இயக்கம் ஒன்றுடன் மோதலில் இட்டுபட்டு இருந்தனர். இந்த நகர் Aleppo நகரில் இருந்து 15 km தென்கிழக்கே உள்ளது.
.

சிரியாவில் இடம்பெறும் யுத்தம் ஒரு civil war என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் அது வெளியாரால் உருவாக்கப்பட்டு தொடரப்படும் ஒரு யுத்தமாகும். இதை proxy-war என்றே கூறவேண்டும்.
.

அசாத் விரோத சவுதியும், மேற்கும் அசாத்தை விலக்கி தம் ஆதரவு ஆட்சியை சிரியாவில் அமைக்க முனைந்தனர். அதற்காக சிரியாவுள் எதிர் அணி ஒன்றை உருவாக்கி பணம், ஆயுதம் வழங்கினர். அப்போது ஈரானும் ரஷ்யாவும் அசாத்தின் உதவிக்கு வந்தது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அல்கைட சார்பு குழுக்களும் அங்கு வளர்ந்தன.
.