சிரியாவை மீண்டும் உள்ளெடுக்கும் Arab League

சிரியாவை மீண்டும் உள்ளெடுக்கும் Arab League

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் சிரியாவின் (Syria) சனாதிபதி அசாத்தை (al-Assad) தலைமையிலான ஆட்சியை கலைத்து தமது பொம்மை அரசு ஒன்றை அமைக்க முனைந்தன.

அக்காலத்தில் 22 அரபு நாடுகளை அங்கம் கொண்ட Arab League என்ற அமைப்பும் சிரியாவை Arab League அமைப்பில் இருந்து வெளியேற்றின.

அசாத் அரசு முதலில் ஆட்டம் கொண்டிருந்தாலும் பின் ஈரானும், ரஷ்யாவும்- உதவிக்கு வர, மேற்கு வளர்த்த Free Syrian Army போன்ற இயக்கங்கள் தோல்விகளை அடைந்த. அசாத் ஆட்சி மீண்டும் உரமாக, மேற்கின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியுற, தற்போது அரபு நாடுகள் மீண்டும் சிரியாவுடனும், அசாத்தினுடனும் உறவை வளர்க்க முன்வந்துள்ளன.

அதன் ஒரு படியாக Arab League இன்று ஞாயிறு சிரியாவை மீண்டு Arab League அமைப்பில் இணைத்துள்ளது. அசாத்தையும் அமர்வுகளுக்கு வர அழைத்துள்ளது.

அண்மையில் சீனா சியா இஸ்லாமிய ஈரானுக்கும், சுனி இஸ்லாமிய சவுதிக்கு இடையில் மீண்டும் நட்புறாவை ஏற்படுத்தியதும் மேற்படி திருப்பதுக்கு காரணம் ஆகிறது.

மத்தியகிழக்கை இதுவரை பிரித்து ஆண்ட அமெரிக்கா தற்போது பின்னடைவில் உள்ளது.

அமெரிக்கா தொடர்ந்தும் அசாத் அரசை புறக்கணிக்கும் என்று கூறியுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jake Sullivan தற்போது சவுதிக்கு பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்.